தாயை கொலை செய்த மகள் கைது
கஹவத்தை, வெல்லதுர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் கழுத்தறுத்து பெண்ணொருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 13ஆம் திகதி அதிகாலை கூரிய ஆயுதத்தால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் 71 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் அவரது வீட்டில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டது.
குறித்த பெண் தனது மகளுடன் வீட்டில் வசித்து வந்ததாகவும், மகள் வீட்டை விட்டு வெளியே சென்ற போதே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
தாயை கொலை செய்த மகள் கைது
இந்த சந்தேகத்திற்கிடமான கொலைச் சம்பவம் தொடர்பில் கஹவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில் குறித்த பெண்ணின் மகளே இந்த கொலையை செய்துள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி இன்று அதிகாலை 38 வயதான சந்தேக நபரான மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பில் கஹவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வீடியோ
- கலு கங்கா துணைப் படுகைக்கான வெள்ள எச்சரிக்கை
- செப்டம்பரில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 100000 ஐத் தாண்டியது
- இலங்கை மத்திய வங்கி இப்படி அறிக்கை
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- கனமழை காரணமாக மேல் கோட்மலை நீர்த்தேக்கத்தின் வழிந்தோடும் கதவு திறக்கப்பட்டது
- பாராளுமன்றத்தில் 22வது திருத்தத்தின் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் நடைபெற்று வருகிறது
- பாதுகாப்புப் படைத் தலைவர் அலுவலகம் இல்லாமல் போயுள்ளது
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
- காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக சிவப்பு எச்சரிக்கை
- மூன்று புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

















