செய் அல்லது செத்து மடி – உக்கிரம் பெறும் ரஷியா தாக்குதல்

Spread the love

செய் அல்லது செத்து மடி – உக்கிரம் பெறும் ரஷியா தாக்குதல்

செய் அல்லது செத்து மடி உக்கிரேன் தலைநகர் கீவ் நகரை மீட்கும் நோக்கத்துடன் ரசியா படைகள் தீவிர முற்றுகை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன


இதுவரை இராணுவ மையங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்திய ரசியா இராணுவம் தற்போது மக்களை அங்கிருந்து அகற்றும் முகாமாக பொது இடங்களை இலக்கு வைத்து தாக்குதலை ஆரம்பித்துள்ளன

இந்த தாக்குதல்கள் அகோரத்தில் கீவ் நகரின் ஷொப்பிங் கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்துள்ள காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது

அழகிய கட்டிடங்கள் இடிந்து தொங்கும் காட்சிகள் உருக்குலைந்த மனித உடல் போல காட்சி தருகிறது

இவை தற்போது ரஷியா இராணுவத்தின் மூர்கத்தனமான தாக்குதலின் அகோரத்தை வெளிப்படுத்துகிறது

ரசியா இராணுவத்தின் செய் அல்லது மடி என்கின்ற இராணுவ தாக்குதல்கள் உக்கிரேன் களமுனையில் உக்கிரம் பெற்று வருகிறது

கொடிய போர் இவ்விதம் தொடர்ந்து வந்தாலும் ரசியா தனது சமாதானத்தை முகத்தையும் காட்டிய வண்ணம் உள்ளது இந்த பேச்சு வார்த்தை மேசையில் ரசியா நடத்திய பேரம் பேச்சு தோல்வியில் முடிந்த

நிலையில் ரசியா இராணுவம் இந்த அகோர வெறி தாக்குதலை தொடுத்துள்ளது ,உலக நாட்டு ஆயுதங்கள் யாவும் இங்கு பொய்த்து போயுள்ளது

ரசியா இராணுவம் உக்கிரேன் தலை நகர் கீவ் நகரை தனது
கட்டு பாட்டுக்குள் கொண்டு வரும் செய் அல்லது செத்து மடி தாக்குதலை தொடுத்துள்ளது

தமது தலை நகரம் எதிரி இராணுவத்திடம் வீழ்ச்சியுறுவதை தடுக்கும் முகமாக அமெரிக்கா பிரிட்டன் கனடாவிடம் உக்கிரேன் அவசர ஆயுத உதவியை கோரியுள்ளது

மேற்குலகம் வழங்கும் இந்த யுத்த உதவிகள் இரும்பு கரம் கொண்ட உலக வல்லாதிக்க ரசியா இராணுவத்திடம் இருந்து தப்பித்து கொள்ளுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது

உக்கிரேன் அதிபரின் அடம் பிடிக்கும் கொள்கையால் பேரழிவில் சிக்கியுள்ள உக்கிரேன் நாட்டை காப்பாற்ற முடியா நிலையில் உக்கிரேன் செல்ல கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது

நாட்டை பறிகொடுத்து உலக நாடு ஒன்றிடம் தஞ்சம் புகுந்து வாழும் நிலையில் உக்கிரேன் செல்லும் அபாயம் எழுந்துள்ளது

எதிரியின் காலடியில் வீழ்ந்து தமது நாட்டை பாதுகாத்த வண்ணம் மக்கள் பேரழிவை தடுப்பதே போரியல் தந்திரம் என்கிறது போரியல் விதி

ஆனால் மேலே கூறப்பட்டுள்ள இந்த இரண்டாம் உலக போரில் கடைபிடிக்க பட்ட விடயங்கள் கைடைபிடிக்க வில்லை என்பதே களநிலவரமாகி உள்ளது

Leave a Reply