 
                
சுத்தம் செய்துகொண்டு இருந்தவரை மோதிய வாகனம்
அச்சுவேலி – வல்லை, பருத்தித்துறை பிரதான வீதியில், வீட்டுக்கு முன்னால் சுத்தம் செய்து கொண்டு இருந்தவர் மீது வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயங்களுக்குள்ளாகினார்.
இதில் சீனியர் சந்திரகாந்தன் என்ற 56 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
கோழிக்குஞ்சுகளை ஏற்றிச் சென்ற வாகனமே இவ்வாறு வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியது.
வாகனத்தை செலுத்தியவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர் எனவும், இவர் வட்டுக்கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்
 
    














