சிறையில் இருந்து இருவர் தப்பியோட்டம்
சிறையில் இருந்து இருவர் தப்பியோட்டம் ,பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகள்
சிறைச்சாலை அதிகாரி
சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (26) தப்பிச் சென்றதாக பல்லேகல பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பியோடியவர்கள் கொழும்பு- 5 ஐச் சேர்ந்த 37 வயதுடையவர் மற்றும் கொழும்பு 15, மட்டக்குளியவைச் சேர்ந்த ஒருவர்.
சிறைச்சாலையின் பேக்கரி பிரிவில் பணிபுரிந்து கொண்டிருந்த இரு கைதிகளும் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் விசாரணை
சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பல்லேகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










