கொரோனாவுக்கு எதிராக போராடும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் photo

Spread the love

கொரோனாவுக்கு எதிராக போராடும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் photo

துயர்தோய்ந்த அவலம் நிரம்பிய முள்ளிவாய்க்கால் கூட்டுநினைவுகளை நெஞ்சில் சுமந்தவாறு, மானிடநேயம் கொண்ட

ஈழவிடுதலைப்பண்பை வெளிக்காட்டும் உலகிற்கு வெளிக்காட்டும் வகையில், மே18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கொரோனாவுக்கு எதிராக போராடும் பிரித்தானிய

சுகாதாரகளப்பணியாளர்களுக்கு தனது தோழமையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், வெளிப்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு இதுவரை 246 406 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 34 796 பேர்

உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் Croydon university hospital, kinston hospital, northwick park hospital, liverpool heart and chest hospital,royal

Bournemouth hospital ஆகிய NHS மருத்துவமனைகளுக்கு ஓரு தொகுதி உலர்உணவுகள், குடிநீர்வகைகள் நாடுகடந்த தமிழீழ

அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது செய்தியோடுவழங்கப்பட்டிருந்தன.

சிங்கள பேரினவாதத்தின் முள்ளிவாய்கால் இனவழிப்பின் போது, மக்கள் உணவின்றி மருத்துவமின்றி எந்தவித பாதுகாப்பும் இன்றி

கதறிய கருகிய நாட்களை மட்டுமல்ல, அவ்வேளையில் குண்டுமழைகளுக்கு நடுவே மக்களோடு மக்களாக நின்று பணியாற்றிய சுகாhரப்பணியாளர்களை நெஞ்சில் ஏந்தி, வைரஸ்

தொற்று அச்சுறுத்தல்களுக்கு நடுவே கொரோனாவுக்கு எதிராக போராடிவரும் சுகாதாதரப்பணியாளர்களுக்கு தமது நன்றியினை

தெரிவித்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள், தமிழினப்படுகொலை தொடர்பான ஆவணம் ஒன்றினையும் கையளித்தனர்.

Corona – Tamils Task Force எனும் தமிழர் சிறப்பு குழுவினை அமைத்தது கொரோனா வைரஸ் பெருந்தொற்றினை

மையப்படுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கியுள்ளதோடு, கொரோனா நெருக்கடி நீண்டகாலத்துக்கு நீடிக்க இருக்கின்ற நிலையில், தமிழர்களின் நலன்களின்

அடிப்படையில் உடனடியானதும், நீண்டகாலத்துக்குமான செயற்திட்டங்களை வகுத்து தமிழர் தாயகம், புலம்பெயர்

தமிழர்கள், உலகத் தமிழர்கள் என செயற்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.

      Author: நலன் விரும்பி

      Leave a Reply