கிழக்கு ஆளுநர் கடமை பொறுப்பேற்பு
கிழக்கு ஆளுநர் கடமை பொறுப்பேற்பு ,கிழக்கு மாகாண ஆளுநராக ஜயந்த லால் ரத்னசேகர திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் வியாழக்கிழமை (26) அன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
பேராசிரியரான ஆளுனரை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார். ஊவாவெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 2017 பெப்ரவரி முதல் நவம்பர் 2023 வரை செயற்பட்டுள்ள இவர் கந்தளாய் அக்ரபோதி வித்தியாலய பழைய மாணவருமாவார்.
குறித்த நிகழ்வில் மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி எஸ் ரத்நாயக்க, ஆளுனர் செயலக செயலாளர் எல்.பி மதநாயக்க, மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண திணைக்கள தலைவர்கள் , தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் அருண் ஹேமச்சந்திர மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
- ஜெருசலேம் சோதனைச் சாவடியில் இஸ்ரேலியத் தாக்குதலில் பாலஸ்தீனிய சிறுமி காயம்

- ஈரானிய விமான நிறுவனங்கள் மீதான தடைகளிலிருந்து விலக்கு கோரி ஈராக் அமெரிக்காவிடம் கோரிக்கை

- மேற்குக் கரை எல்லைகள் அனைத்தையும் இஸ்ரேல் மூடவுள்ளது

- அல்-அக்ஸா மீது முழுமையான கட்டுப்பாட்டையும் ஆதிக்கத்தையும் ஏற்படுத்த இஸ்ரேல் வழி வகுக்கிறது

- நல்லூரில் நினைவு விழாவைத் தொடர்ந்து திலீபன் நினைவிடம் காவல்துறையினரால் அகற்றப்பட்டது









