காவல்துறையின் மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி
காவல்துறையின் மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி ,மீனவர்களின் போராட்டத்திற்கு எதிரான காவல்துறையின் மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
பொதுமக்களுக்கு குறிப்பிடத்தக்க சிரமத்தை ஏற்படுத்துவதாகக் கூறி, மீனவர்கள் குழுவினால் நடத்தப்பட்ட போராட்டத்தை நிறுத்த உத்தரவிடக்
கோட்டை காவல்துறையினர் தாக்கல் செய்த மனு
கோரி கோட்டை காவல்துறையினர் தாக்கல் செய்த மனுவை கொழும்பு கோட்டை நீதிபதி இசுரு நெத்திகுமார இன்று நிராகரித்தார்.
இந்தக் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, அமைதியான போராட்டங்களில் ஈடுபட பொதுமக்களுக்கு உரிமை உண்டு என்றும், போராட்டம் நடத்துவது மக்களின் அடிப்படை உரிமை என்றும் கூறினார்.
போராட்டக்காரர்கள் மோட்டார் போக்குவரத்துச் சட்டம் மற்றும் காவல்துறை கட்டளைச் சட்டம் உள்ளிட்ட சட்ட விதிகளை மீறி, பொதுமக்களுக்கு சிரமத்தை
ஏற்படுத்தும் வகையில் போராட்டங்களை நடத்தினால், அவர்களின் சட்ட அதிகாரங்களின்படி செயல்படுமாறு கோட்டை காவல்துறையினருக்கு நீதிபதி மேலும் அறிவுறுத்தினார்.
நீதிபதி நீதிமன்றத்தில்
கோட்டை நீதிபதி நீதிமன்றத்தில் மேலும் அறிக்கைகளை சமர்ப்பித்த கோட்டை போலீசார், இந்தப் போராட்டம் பொதுமக்களுக்கு குறிப்பிடத்தக்க
சிரமத்தை ஏற்படுத்தியதாகவும், மீனவர்கள் தொடர்ந்து ஆறு நாட்களாக போராட்டத்தை நடத்தி வருவதாகவும், அதன் அடிப்படையில் கோரிக்கை விடுக்கப்பட்டது என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
டிராக்டர்களில் பொருத்தப்பட்ட வின்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மடால் மீன்பிடித் தொழிலுக்கு தற்போதைய அரசாங்கம்
விதித்துள்ள தடையை நீக்கக் கோரி போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக காவல்துறை மேலும் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.







