இஸ்ரேல் தாக்குதலில் தளபதி படுகொலை
கமாஸ் தளபதி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் உளவுத்துறை மொஸாட் திடீரென அறிவித்துள்ளது.
சிரியாவின் ரகசிய முகாமில் பணியாற்றிக் கொண்டிருந்த கமாஸ் தளபதிகளை இலக்கு வைத்து இஸ்ரேலுடைய உளவு விமானங்கள் தாக்குதலை நடத்தின.
இந்த ஆளில்லாத உளவு விமானங்கள் நடத்திய திடீர்தாக்குதலில் அந்த முகாம் பற்றி எரிந்து சேதமானது .
இதன் பொழுது அங்கு தரித்திருந்த கமாஸ் முக்கிய தளபதி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்திரேலிய ராணுவம் நடத்திய இந்த திடீர் தாக்குதல் தொடர்பாக சிரியாவின் ராணுவ வட்டாரங்கள் ஏற்றுக்கொண்டு அறிவித்துள்ளதுடன், தமது ராணுவ தரப்பில் ஐந்து பேர் பலியாகி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ராணுவ முகாமில் இருந்த ஆயுத தளவாடங்கள் உள்ளிட்ட கட்டடங்கள் எரிந்து வெடித்து சிதறிய காட்சிகள் காணப்படுகின்றன.
இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலில் வீர மரணம் அடைந்த மக்கள் தளபதி யார் என்பது தொடர்பாக இதுவரை உறுதியாக தெரிய வரவில்லை.
இஸ்ரேல் பலஸ்தீனத்திற்கு இடையில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற இந்த இடைவிடாத யுத்தம் காரணமாக அப்பாவி மக்கள் பல்லாயிரக்கணக்கில் பலியாகி பல ஆயிரக்கணக்கில் காயமடைந்துள்ளனர் .
ஆனால் இடைவிடாது இஸ்ரேல் தனது இன அழிப்பு தொடர்ந்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான முக்கிய கொள்கைகள் மற்றும் முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது பிரதமர்

- துறைமுக நகரத்தில் கூர் ஆயுதத் தாக்குதலில் ஒருவர் பலி

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி கண்டியில் நடைப் பேரணி தொடங்கியது

- மாத்தளையில் மூன்று காவல்துறை அதிகாரிகள் மீதான தாக்குதல் தொடர்பாக நால்வர் கைது

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ரியாத் விமான சேவைகளை அக்டோபர் 18 வரை நிறுத்திவைக்கிறது

- மெட்ரோ பேருந்துடன் மோதிய தனியார் பேருந்துக்கு தற்காலிக பணிநீக்க உத்தரவு

- முன்னாள் பிரதம நீதிபதி திலின கமகேவை பதவி நீக்கம் செய்ய நீதித்துறை சேவை ஆணைக்குழு முடிவு

- 10000 இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் வனக் கள உதவியாளர் கைது

- கைது நடவடிக்கையைத் தடுக்கும் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து கோட்டாபய மேல்முறையீடு தாக்கல்









