கட்டார் செல்ல முயற்சித்த யுவதி கைது
கட்டாருக்கு சட்டவிரோதமான முறையில் வீட்டு வேலைக்காக செல்ல முயற்சித்த இளம் யுவதியொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு – மொரட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளம் யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யப்படாத முகவர் ஒன்றினால் கட்டாருக்கு சட்டவிரோதமான முறையில் வீட்டு
வேலைக்குச் செல்வதற்காக குறித்த யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது, விமான நிலைய குடிவரவு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டார் செல்ல முயற்சித்த யுவதி கைது
21 வயதுக்கு மேற்பட்ட யுவதிகள் வீட்டு வேலைக்காக கட்டாருக்கு விண்ணப்பிக்க முடியும் எனவும், கைது செய்யப்பட்ட இளம் யுவதி வீட்டு சேவைக்கு விண்ணப்பிப்பதற்கான சரியான வயதை பூர்த்தி செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட யுவதி மேலதிக விசாரணைகளுக்காக குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்
- இன்று பல பகுதிகளில் மழை
- ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்
- வானிலைத் துறை உயர் அலைகளுக்கு அம்பர் அறிவுரைகளை வழங்குகிற
- பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு
- 2025 O/L பரீட்சையின் மறுபரிசீலனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது
- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை
- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது
- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

















