ஊரடங்கு சட்டத்தை மீறிய 79 பேர் கைது
ஊரடங்கு சட்டத்தை மீறிய 79 பேர் கைது
கம்பஹா மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு
சட்டத்தை மிறிய 79 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
18 மோட்டார் சைக்கிள்களும் முச்சக்கரவண்டி ஒன்றும் இவர்களிடம் இருந்து பொறுப்பேற்கப்பட்டதா பொலிஸார் தெரிவித்துள்ள
பிரிட்டனில் கொரனோவால் 70 பேர் பலி -14,162 பேர் பாதிப்பு
பிரிட்டனில் 70 பேர் பலி -14,162 பேர் பாதிப்பு
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
கடந்த
இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் எழுபது பேர்
பலியாகியுள்ளனர் ,மேலும் 14,162 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
இறப்பு விகிதத்தை ஆளும் அரசு திட்டமிட்டு மறைத்து வருவதான
குற்ற சாட்டு மக்களினால் முன் வைக்க பட்டு வருவது குறிப்பிட தக்கது
பிரிட்டனில் – திங்கள் முதல் உணவகங்கள் ,பார்கள் முற்றாக அடித்து பூட்டு
பிரிட்டனில் – திங்கள் முதல் உணவகங்கள் ,பார்கள் முற்றாக அடித்து பூட்டு
பிரிட்டனின் ஒரு பகுதியாக விளங்கும் ஸ்கொட்லாண்டில் எதிர்வரும் திங்கட்கிழமை
முதல் பார்கள் ,மற்றும் உணவகங்கள் இருவரத்திற்கு அடித்து பூட்ட படவுள்ளதாக அந்த பிராந்திய முதல்வர் தெரிவித்துள்ளார்
அங்கு அதிகரித்து வரும் கொரனோ பரவலை அடுத்து மேற்படி முழு லாக் டவுனுக்கு உத்தரவிட பட்டுள்ளது
,அவ்வாறு எனின் ஐப்பசி மாத இறுதியில் அல்லது நவம்பர் மாத முற்பகுதியில்
பிரிட்டன் தழுவிய நிலையில் முழு லக்கடவுனுக்கு அழைப்பு விடுக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது ,
இந்த கால பகுதியில் நாள் ஒன்றுக்கு முந்நூறுக்கு மேற்பட்டவர்கள் பலியாகலாம் என எதிர் பார்க்க படுகிறது

நினைத்தது நடந்தது ….!
நினைத்தது நடந்தது ….!
நீ தொடுக்க வா
நான் முடிக்க வா
நிழல் தூங்க வா
நீர் ஓட வா ..?
பூமி வறண்டது
பூவும் உலர்ந்தது
வேரும் செழிக்கவே
வேண்டுதல் செய்ய வா ..?
இடி இடிக்க வா
இடர் மறைய வா
காற் றுதைக்க வா
கன மழை கொட்ட வா ..?
வெட்கை தனியவே
வீழ்ந்த மழையே
கால் தழுவியே
கடந்த வெள்ளமே
ஊரு சிரித்தது
உதடு மலர்ந்தது
வேரும் வைத்தது
வேண்டுதல் நிலைத்தது
வன்னி மைந்தன்
ஆக்கம் -07-10-2020
( சிலோடை சிணுங்கல்- இரட்டை அர்த்தம் )
மனைவி ,மகனை கொன்று 2 கிழமை பிணத்துடன் வசித்த தமிழர் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்
மனைவி ,மகனை கொன்று 2 கிழமை பிணத்துடன் வசித்த தமிழர் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்
புரிட்டனில் 36 வயதுடைய மனைவி மற்றும் மூன்று வயது மகனை கொன்று
அவர்கள் சடலத்துடன் இரண்டு கிழமை 42 வயது இந்திய தமிழ் கணவர் வசித்து வந்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்
அதன் பின்னரே தன்னை அவர் குதி தற்கொலை செய்துள்ளது ,சடல பரிசோதனையில் தெரிய வந்துள்ளது
இவ்வாறான மூர்க்கத்தனமான கொலைக்கு கரணம் என்ன என்பது தெரியவில்லை ,
மேற்படி விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
போலீஸ் விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது
யாழில் பொருட்களை அள்ளி செல்லும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
யாழில் பொருட்களை அள்ளி செல்லும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
யாழ்ப்பாணத்தில் போதியளவு அத்தியாவசியப் பொருள்கள் கையிருப்பில் உள்ளன. பொதுமக்கள் தேவையற்ற வகையில்
பொருள்களை கொள்வனவு செய்து செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம்” என்று யாழ்ப்பாண்ம் வணிகர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தில் நேற்று (06) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே யாழ்ப்பாணம் வணிகர் கழகம் இதனைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின் தலைவர் ஜெயசேகரம் தெரிவித்ததாவது,
நாட்டில் தற்போது கோரோனா வைரஸ் சமூகத் தொற்றாக மாறியுள்ள நிலையில் மக்கள் சுகாதார அறிவுறுத்தல்களை
பின்பற்ற வேண்டும். இது மட்டுமன்றி சமூகத் தொற்று காரணமாக நாடு முடக்கப்படும் என்ற சந்தேகத்தினால் அத்தியாவசியப்
பொருள்களை அதிகளவாக கொள்வனவு செய்கின்ற நிலையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இந்த நடவடிக்கை தேவையற்ற ஒன்று. யாழ்ப்பாணம் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தற்போதைய சூழலில்
தேவையான அளவு அத்தியாவசியப் பொருள்கள் அனைத்து வர்த்தக நிலையங்களிலும் கையிருப்பில் உள்ளன. அது மட்டுமன்றி
கொழும்பிலிருந்து அத்தியாவசியப் பொருள்கள் எடுத்துவரப்படுகின்றன.
ஆகையால் தேவையற்ற முறையில் பொருள்களை கொள்வனவு செய்து தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம்.
அது மட்டுமன்றி ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் பொருள்களை வீடுகளுக்கு கொண்டு சென்று விநியோகிப்பதற்கும் திட்டத்துக்கும் வர்த்தகர்கள் தயாராகவே உள்ளனர்.
அத்தோடு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேசங்களிலும் உள்ள மக்களுக்கும் அங்குள்ள பிரதேச
வர்த்தகர்களுடாக பொருள்களை விநியோகிப்பதற்கான திட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம். எனவே தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம்.
இதேவேளை, அரசினால் இறக்குமதிக்கு தடை செய்யப்பட்ட பொருள்களே கூடிய விலையில் விற்பனையாகின்றன. விலை
ஏற்றம் வர்த்தகர்களால் ஏற்பட்டதல்ல. இறக்குமதியாளர்களால் ஏற்படுத்தப் பட்டது. அதற்கு அரசுதான் தடையை நீக்க வேண்டும் – என்றார்.
குண்டு தாக்குதல் விசாரணைகள் நிறுத்தப்படவில்லை- கோட்டா முழக்கம்
குண்டு தாக்குதல் விசாரணைகள் நிறுத்தப்படவில்லை- கோட்டா முழக்கம்
உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சநதேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர்
ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்பதற்காக குற்றச்செயல் தொடர்பான
விசாரணைகள் நிறுத்தப்படவில்லை என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஸ நேற்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும்Capture Reply 02தெரிவித்துள்ளார்.விசாரணைகளின் அடிப்படையில்
சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலர் எதிர்காலத்தில் கைது செய்யப்படக்கூடும் எனவும் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்வைத்த வாய்மொழி மூல வினாக்களுக்கு பதிலளித்த அமைச்சர் இந்த
விசாரணைகளின் போது முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் இந்த விடயங்களுடன் ரியாஜ் பதியுதீன்
தொடர்புபடவில்லை என உறுதிபடுத்தப்பட்டமைக்கு அமைய அவர் விடுதலை செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
ரியாஜ் பதியுதீனின் கைது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் இருவேறு அறிவிப்புகள் தொடர்பிலும் இதன்போது
பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி முன்வைத்த கேள்விக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஸ பதில் அளித்தார்.
முகக்கவசம் அணிய மறுப்போர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்- அரசு அறிவிப்பு
முகக்கவசம் அணிய மறுப்போர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்- அரசு அறிவிப்பு
முகக்கவசம் அணிய மறுப்போர் யாராக இருந்தாலும் அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு
உட்படுத்தப்படுவார்கள் என்று இராணுவத்தினர் எச்சரித்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை சவளக்கடை சம்மாந்துறை மத்தியமுகாம்
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் நேற்று(6) காலை முதல் வீதியால் வருவோர்
இடைநிறுத்தப்பட்டு முகக்கவசம் அணிந்து செல்லுமாறு இராணுவத்தினரால் அறிவுறுத்தப்பட்டனர்.
முகக்கவசம் அணியாது செல்பவர்கள் அடையாளம் காணப்பட்டு சுய தனிமைப்படுத்தலுக்கு உடபடுத்தப்படுவார்கள் எனவும்
நாட்டின் நலனை கருத்தில் கொண்டு பாதசாரிகள் வாகன உரிமையாளர்கள் பஸ்களில் பயணிப்பவர்கள் சுகாதார
நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம், தனியார் கல்வி நிலையங்களுக்கு பூட்டு
யாழ்ப்பாணம், தனியார் கல்வி நிலையங்களுக்கு பூட்டு
வட மேல் மாகாணத்தின் அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் மறு அறிவித்தல் வரையில் மூடுமாறு வட மேல் மாகாண ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நாளை (07) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து தனியார் கல்வி
நிலையங்களையும் காலவரையறையின்றி மூடுவது என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று (06) இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
நாட்டில் கோரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய
நடவடிக்கைகள் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது.
கூட்டத்தில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன், யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி உட்பட துறைசார் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்திலேயே யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தனியார் கல்வி நிலையங்களை நாளை முதல் மறு அறிவித்தல் வரை மூடுவது எனத் தீர்மானிக்கப்பட்டது
12 பேர் கழுத்துவெட்டி படுகொலை- உலகை உலுப்பிய பயங்கரம்
12 பேர் கழுத்துவெட்டி படுகொலை- உலகை உலுப்பிய பயங்கரம்
மெக்சிகோவில் பெண்கள் உள்பட 12 பேர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மெக்சிகோவில் பெண்கள் உள்பட 12 பேர் கழுத்தை அறுத்து படுகொலை
தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில், போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் ஆதிக்கம் அதிகம்.
இந்த கும்பல்களுக்கு இடையே நடைபெறும் சண்டையில், நூற்றுக்கணக்கானோர் கொல்லப்படுவது அங்கு வெகுசாதாரணம்
. இந்தநிலையில் மெக்சிகோவின் வடக்கு பகுதியில் உள்ள சான் லூயிஸ் போடோசி மாகாணத்தில் வில்லா டி ரமோஷ் என்கிற
நகரில் உள்ள சாலையில் 2 வேன்கள் கேட்பாரற்று நின்று கொண்டிருந்தன.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் அந்த வேன்களை சோதனையிட்டபோது அவர்களுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது.
2 வேன்களிலும் தலா 6 பிணங்கள் கிடந்தன. 2 பெண்கள் உள்பட 12 பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றினர்.
அவர்கள் அனைவரும் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
அமெரிக்க முப்படை தலைமை தளபதிக்கு கொரனோ
அமெரிக்க முப்படை தலைமை தளபதிக்கு கொரனோ
அமெரிக்க கடலோர காவல்ப்படை துணைதளபதிக்கு கொரோனா உறுதியானதையடுத்து அந்நாட்டின் முப்படைகளின் தலைமை
தளபதி உள்பட பாதுகாப்புபடையின் முக்கிய தலைவர்கள் தனிமைப்படுத்திக்கொண்டனர்.
கடலோர காவல்ப்படை துணைதளபதிக்கு கொரோனா – தனிமைப்படுத்திக்கொண்டார் அமெரிக்க முப்படை தலைமை தளபதி
முப்படை தலைமை தளபதி ஜெனரல் மார்க் மில்லி
வாஷிங்டன்:
அமெரிக்காவில் வெள்ளைமாளிகையை தொடர்ந்து தற்போது அந்நாட்டின் பாதுகாப்புத்துறை தலைமையிடமான பென்டகனிலும் கொரோனா வேகமாக பரவத்தொடங்கியுள்ளது.
வெள்ளைமாளிகையில் கடந்த மாதம் 27-ம் தேதி நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலமாகவே
அதிபர், உள்பட முக்கிய அதிகாரிகளுக்கு கொரோனா பரவுவது தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், கடந்த 27-ம் தேதி வெள்ளைமாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க கடலோர காவல்ப்படை
துணைதளபதியான சார்லஸ் ரே பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு பின் அமெரிக்க பாதுகாப்புத்துறையின் தலைமையிடமான பென்டகனில் நடந்த நிகழ்ச்சிகளிலும் சார்லஸ் பங்கேற்றார்.
பென்டகன் நிகழ்ச்சியில் அமெரிக்காவின் முப்படை தலைமை தளபதி
ஜெனரல் மார்க் மில்லி, முப்படை துணைதளபதி, ராணுவம், விமானப்படை, கடற்படை தளபதி என அந்நாட்டின்
பாதுகாப்புத்துறையின் அனைத்து தலைமை தளபதிகளும், மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இந்நிலையில், அதிபர் டிரம்பிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், வெள்ளைமாளிகை நிகழ்ச்சியில்
பங்கேற்ற கடலோர காவல்ப்படை துணைதளபதி சாரலசுக்கு கடந்த 2-ம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த
பரிசோதனையில் அவருக்கு கொரோனா உறுதியானதையடுத்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து, பென்டகனில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க முப்படை தலைமை தளபதிஹ் ஜெனரல் மார்க் மில்லி,
முப்படை துணைதளபதி, ராணுவம், விமானப்படை, கடற்படை தளபதி என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அந்த பரிசோதனையில் யாருக்கும் கொரோனா இல்லை என முடிவுகள் வந்தது. ஆனாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முப்படை தலைமை தளபதி உள்பட அமெரிக்க
பாதுகாப்புத்துறையின் தளபதிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பென்டகன் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க பாதுகாப்புத்துறையின் தலைமையிடத்திலும் கொரோனா வேகமாக பரவி வருவதால் அதிகாரிகள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.
திருமண தேதியை அறிவித்த காஜல் அகர்வால்
திருமண தேதியை அறிவித்த காஜல் அகர்வால்
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் தனது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
காஜல் அகர்வால்நடிகை காஜல் அகர்வாலுக்கு 35 வயது ஆகிறது. 2008-ல் பொம்மலாட்டம் படத்தில் அறிமுகமானார். பின்னர் விஜய்
, அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம்ரவி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம்
முன்னணி நடிகையாக உயர்ந்தார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருமணத்தை எளிய முறையில் நடத்த உள்ளோம். மேலும் எனக்காக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இத்தனை ஆண்டுகாலம் திரைத்துறையில்
ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. திருமணத்திற்கு பின்னரும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் தொடர்ந்து
நடிப்பேன்” என காஜல் அகர்வால் அதில் குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் காஜல் அகர்வாலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ரசிகர்களை ஏமாற்றிய ஷிவானி
ரசிகர்களை ஏமாற்றிய ஷிவானி
சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகி தற்போது பிக்பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக இருக்கும் ஷிவானி, ரசிகர்களை ஏமாற்றி விட்டதாக ட்ரோல் செய்து வருகிறார்கள்.
ரசிகர்களை ஏமாற்றிய ஷிவானி
ஷிவானி நாராயணன்
சின்னத்திரை நடிகையான ஷிவானி நாராயணன், கொரோனா ஊரடங்கில் கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மிகவும் பிரபலமானார். தினமும் இவரது
புகைப்படத்தை காண ஏராளமான ரசிகர்கள் ஆர்வமானார்கள். தற்போது கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார்.
ஷிவானி நாராயணன்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளே ஷிவானியை வைத்து சமூக வலைத்தளத்தில் ட்ரோல் செய்து வருகிறார்கள். குறிப்பாக
லாக்டவுனில் அவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்களில் ஒல்லியாக இருந்ததாகவும், தற்போது டி.வி.யில் பார்க்கும் போது
மிகவும் குண்டாக இருப்பதாகவும் ட்ரோல் செய்கிறார்கள். இவ்வளவு நாள் எடிட் செய்த போட்டோவை போட்டு ஏமாற்றிவிட்டதாக ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்
தெரிந்து பேசு …!
தெரிந்து பேசு …!
மேடை ஏறி பேசிட வேண்டும்
மேனி வளையா நின்றிட வேண்டும்
வார்த்தை குலையா வந்திட வேண்டும்
வஞ்சம் இல்லா மொழிந்திட வேண்டும்
ஒட்டா உதடு பார்த்திட வேண்டும்
ஓட்டை இல்லா பேசிட வேண்டும்
ஒழுகுதல் இல்லா கரைந்திட வேண்டும்
ஒழுக்கம் அதனில் உரிந்திட வேண்டும்
இத்தனை திறன்கள்
இதனில் இருக்கு
இதனை மொழிந்தால்
உயிர்ப்பு உனக்கு
தெரிந்து வைத்து
தெழிதல் கணக்கு
தெரியா நின்று
தெளித்தல் விலக்கு
உலக விதியில்
உழலும் தவறை
உரித்து எடுத்து
உயிராய் பேசு
வாசல் வந்து
வையம் தட்டும்
வாழும் வரை
வான் புகழோ முட்டும் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் -06-10-2020
மேடை பேச்சின் அடிப்படை கூறுகள் -தெரிந்து கொள்ளுங்கள்
முடங்கிய இலங்கை – ஊரடங்கு அமூல் – பீதியில் மக்கள்
முடங்கிய இலங்கை – ஊரடங்கு அமூல் – பீதியில் மக்கள்
கம்பஹா நிர்வாக மாவட்டத்தின் பொலிஸ் எல்லை பகுதிக்குள் மீண்டும்
அறிவிக்கும்வரையில் இன்று காலை 6.00 மணி தொடக்கம் அமுலுக்கு
வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பொலிஸ் தலைமையகம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 1897 ஆம் ஆண்டு இலக்கம்
03 இன் கீழான தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக சுகாதார சேவைகள்
பணிப்பாளர் நாயகத்தினால் பதில் பொலிஸ் மா அதிபரின் கோரிக்கைக்கு அமைய 2020.10.06 மாலை 6.00 மணி தொடக்கம்
அமுலில் உள்ள வகையில் மறு அறிவித்தல் வரையில் கீழ் கண்ட பிரதேசங்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.
கம்பஹா நிர்வாக மாவட்டத்தில் கம்பஹா பொலிஸ் எல்லைப் பகுதி
கீழ் குறிப்பிட்ட பொலிஸ் பிரிவுகளில் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.
- திவுலப்பிட்டிய பொலிஸ் பிரிவு
- மினுவாங்கொட பொலிஸ் பிரிவு
- வேயாங்கொட பொலிஸ் பிரிவு
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்ட காலப்பகுதியில் அனைவரும் தமது வீடுகளில் இருக்க வேண்டும். இதேபோன்று
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலப்பகுதிக்குள் இந்த பிரதேசத்திற்குள் பிரவேசித்தல்,
அதேபோன்று பிரதேசத்தில் இருந்து வெளியேறுதல் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் தூர இடங்களுக்கான பயணிகள் போக்குவரத்து பஸ்கள் இந்த பிரதேசத்தின் ஊடாக பயணிக்க முடிந்த போதிலும் இந்த
பகுதிகளில் பஸ்களை நிறுத்துதல் மற்றும் பயணிகளை ஏற்றி இறக்குதல் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகளை
ஏற்றுவதற்காகவோ அல்லது இறக்குவதற்காகவோ ரயில்கள் நிறுத்தப்படமாட்டாது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைபவங்கள், ஊர்வலங்கள், களியாட்டங்கள் முதலானவற்றிற்கு தடை
வைபவங்கள், ஊர்வலங்கள், களியாட்டங்கள் முதலானவற்றிற்கு தடை
மினுவாங்கொடை பிரதேசத்தில் கொவிட் 19 நோய்த் தொற்று பரவலை
அடுத்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மகாநாடு, உரைகள்,
கண்காட்சி இசை நிகழ்ச்சிகள், களியாட்ட நிகழ்வுகள், ஊர்வலங்கள்,
பெரகர வீதி உலா மற்றும் அத்தியாவசியமல்லாத கூட்டங்கள் போன்றவற்றை
நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பதில் சுகாதார பணிப்பாளர்
நாயகத்தினால் விசேட அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு சுகாதார அமைச்சின் இணையத்தளத்தை
பயன்படுத்துமாறும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 832 ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 832 ஆக அதிகரிப்பு
மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இதுவரையில் கொரோனா
வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 832 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய தினம் (6 ஆம் திகதி) இரவு 9.40 மணியளவில் திவுலுப்பிட்டிய
கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இவ்வாறு அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம்
நாலக கலுவௌ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவர்கள் அனைவரும்
மினுவங்கொடை தனியார் நிறுவனத்தில் பணியாற்றியவர்கள். என்றும்
இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரிட்டனில் கொரனோ தாக்குதல் 76பேர் பலி – 14,542 பேர் பாதிப்பு
பிரிட்டனில் கொரனோ தாக்குதல் 76பேர் பலி – 14,542 பேர் பாதிப்பு
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் பரவி வரும் கொரனோ
நோயின் தாக்குதலில் சிக்கி எழுபத்தி ஆறு பேர் பலியாகியுள்ளனர், மேலும் 14,542 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இன்று மட்டும் சுமார் வழமைக்கு மாறாக ஐரண்டாயிரம் பேர் அதிகமாக பாதிக்க பட்டுள்ளனர்
எதிர்வரும் வாரம் முதல் நாள் ஒன்றுக்கு ஐம்பதாயிரம் பேர் பாதிக்க
படலாம் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
,இவ்வாறு நோயின் தாக்குதல் அதிகரித்தால் முற்று முழுதாக பிரிட்டன்
முடங்கும் நிலைக்கு செல்லும் என அபாயம் வெளியிட பட்டுள்ளது
சர்ச்சையை ஏற்படுத்திய பிரிட்டனில் 250 பேருடன் இடம்பெற்ற இந்தியர் திருமணம்
சர்ச்சையை ஏற்படுத்திய பிரிட்டனில் 250 பேருடன் இடம்பெற்ற இந்தியர் திருமணம்
பிரிட்டனில் கொரனோ நோயின் காரணாமாக நிகழ்வுகளில் பதின் ஐந்துபேருக்கு
மேல் கலந்து கொள்ள கூடாது என தடை சட்டம் விதிக்க பட்டுள்ளது
அவ்வாறு மீறுபவர்களுக்கு தண்டம் அறவிட பட்டு வருகிறது
ஆனால் இந்தியாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது திருமணத்தை 250 பேரை
கூட்டி மிக பிரமாண்டமாக செய்துள்ளதுடன் ,அங்கு அவர்களது
நிகழ்வை பெரும் திரையில் காண்பித்துள்ளார்
மேற்படி சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன் ,.சட்ட விதிகளை
மீறினார்கள் என்ற குற்ற சாட்டில் தண்டமும் அறவிட பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
இத்துடன் இவர்கள் திருமணம் உலக புகழ் பெற்ற ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது




சர்ச்சையை ஏற்படுத்திய
லண்டனில் மனைவி பிள்ளையை வெட்டி கொன்ற தமிழர்
லண்டனில் மனைவி பிள்ளையை வெட்டி கொன்ற தமிழர்
இன்று லண்டன் பிரெண்டபோர்ட .பகுதியில் தமிழர் ஒருவர் தனது 36 வயது மனைவி
மற்றும் மூன்று வயது மகனை கத்தியால் கோரமாக குத்தி படுகொலை
செய்து ,தன்னை தானும் குத்தி தற்கொலை செய்துள்ளார்,
தற்கொலை செய்து கொண்ட கணவர் 42 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்
இந்த கொலைக்கான உடனடி கரணம் தெரியவரவில்லை ,இரத்த வெள்ளத்தில்
கிடந்த சடலங்கள் மீட்க பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
இது குறித்த விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
மனநோயின் தாக்குதல் அதிகரிப்பு காரணமாக இவ்வாறான படுகொலை
சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது,இந்த வருடத்தில்
இடம்பெற்ற நூறாவது கொலையாக இவர்களது படுகொலை சம்பவம் பதிய பெற்றுள்ளது என காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்
அயலவர்களோ பழகுவதற்கு மிகவும் இனிமையானவர் ,அழகான குழந்தை ,
சிரித்த முகத்துடன் செல்வார்கள் ,அவர்களுக்கு நடந்துள்ள இந்த செயல்
தம்மை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளதாக அவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்








