உறவுகளை நினைவுகூருவதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு
உயிரிழந்த உறவுகளை நினைவு கூருவதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு, ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவை யாரும் மீற முடியாது அவ்வாறு மீறியவர்கள்தான் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறு கைது .கைது செய்யுமாறு கூட எவரும் கட்டளை பிறப்பிக்கவில்லை.பொலிஸார் தமது கடமையை செய்துள்ளார்கள் என
நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (06 விசேட கூற்றை முன்வைத்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
உயிரிழந்த உறவுகளை நினைவு கூருவதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு மீறமுடியாது
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி,புதிய சட்டத்தை உருவாக்க முன்வைக்கப்பட்ட சட்ட நகலை ஒரு தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் சலாலுக்குட்படுத்தினார்கள்.
இவ்வாறான நிலையில் 2019.ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டது.தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பயங்கரவாத தடைச்சட்டம் அப்போது கடுமையாக பயன்படுத்தப்பட்டது.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது ஆட்சியாளர்களின் பொறுப்பு நாட்டு மக்களின் உயிரை பாதுகாப்பதற்காகவே பயங்கரவாத தடைச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றது.
இவ்வாறான நிலையில் கடந்த ஆண்டு முதல் உத்தேச பயங்கரவாத தடைச்சட்டமூலத்தை சமர்ப்பித்தேன்,அந்த சட்டமூலம் தொடர்பில் ஆளும்
உறவுகளை நினைவுகூருவதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு
மற்றும் எதிர்தரப்பினர் மாறுப்பட்ட கருத்துக்களை முன்வைத்ததால் அதனை வாபஸ் பெற்று முதல் நகலை திருத்தம் செய்ய நடவடிக்கைகளை முன்னெடுத்தேன்.
உத்தேச பயங்கரவாத தடைச்சட்டமூலம் தொடர்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் பேச்சுவாரத்தையில் ஈடுபட்டு அவர்களின் நிலைப்பாட்டையும் பெற்றுக்கொண்டுள்ளேன்.
எதிர்வரும் மாதமளவில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்து செய்ய வேண்டும் என சுமந்திரன் எம்.பி.குறிப்பிடுகிறார்.
ஆனால் அவரை கொலை செய்ய முயற்சித்தவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்தான் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு.நாம் அனைவரும் மனிதர்கள்.
ஆகவே உறவுகளின் முக்கியத்துவத்தை மதிக்க வேண்டும்.ஆனால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் பெயர்,இலட்சினைகள் ஆகியவற்றை பயன்படுத்த முடியாது.
அண்மையில் இடம்பெற்ற நினைவேந்தல் தினத்தன்று நீதிமன்றத்தின் உத்தரவை மீறி செயற்பட்டவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்..
இவர்களை கைது செய்வதற்கு எவரும் கட்டளை பிறப்பிக்கவில்லை அது பொலிஸாரின் பொறுப்பு.இவ்விடயத்தின் நான் என்ன செய்ய முடியும் என்றார்.
- 9 மாதங்களில் 360-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை
- பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்
- சீனாவும் ரஷ்யாவும் ஈரானுக்கு ‘சற்றும்’ உதவுவதாகத் தாம் நம்பவில்லை என டிரம்ப் கூறுகிறார்
- கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- பௌத்த மதத்திற்கு முதன்மை இடம் சஜித் பிரேமதாச வருத்தம்
- விசாரணைக்காக ஷிராந்தி ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை
- 7வது CICA உச்சிமாநாட்டிற்கு இலங்கை தூதுக்குழுவிற்கு வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தலைமை தாங்குகிறார்
- ஷிராந்தி ராஜபக்ஷவின் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
- உடல்நலக்குறைவால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
- நாவலபிட்டிய நகர சபைத் தலைவர் மற்றும் மூவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்
- முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தம்மாம்–கொழும்பு விமான சேவைகளை அக்டோபர் 18 வரை நிறுத்திவைக்கிறது



















