இலங்கை கடற்படை 60 பேருக்கு கொரனோ

Spread the love

இலங்கை கடற்படையின் வெலிசறை முகாமில் இதுவரையில் 60 பேருக்கு கொரோனா வைரசு தொற்று இருப்பதாக தெரிவித்த

இராணுவ தளபதி லெப்டினென் ஜெனரல் சவேந்திர சில்வா இதனால் இந்த கடற்படை முகாம் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்ட முகாமாக்கப்பட்டிருப்தாக தெரிவித்தார்.

இன்று இதுதொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இந்த கடற்படை முகாமைச் சேர்த வீரர் ஒருவர் நேற்று கொரோனா

    தொற்றுக்கு உள்ளாமை உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று மேற்கொள்ளப்பட்ட பி சி ஆர் பரிசோனைகள்

    மூலம் 30 பேர் தொற்றுக்கு உள்ளாகியிருப்து உறுதி செய்யப்பட்டது. தற்போது வெலிசறை முகாமில் 60 வீரர்களுக்கு வைரசு தொற்று

    இருப்பதாக உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் இராணுவ தளபதி கூறினார்.

    விடுமுறையில் சென்றிருந்த வெலிசறை கடற்படை வீரருக்கே கொரோனா தொற்று முதலில் காணப்பட்டதாக தெரிவித்த

    இராணுதளபதி ,இதனை தொடர்ந்து இந்த முகாமிலிருந்து விடுமுறையில் சென்ற அனைத்து வீரர்களையும் முகாமிற்கு

    அழைத்து வர நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இதேபோன்று இவர்களைச்சார்ந்த குடும்ப உறுப்பினர்களையும் தனிமைப்படுத்த

    நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். பொது மக்கள் இதுதொடர்பில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என்றும்

    இராணுவ தளபதி லெப்டினென் ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்

    இலங்கை கடற்படை
    இலங்கை கடற்படை

      Author: நலன் விரும்பி

      Leave a Reply