இருவர் கைது துப்பாக்கிச் சூட்டு சம்பவம்
இருவர் கைது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ,மாத்தறை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
மாத்தறை நவிமன பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்றதற்கு உதவிய இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தென் மாகாண செயற்பாட்டு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதி மாத்தறை நவிமன பகுதியில் காரில் வந்த இருவரால் 26 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
விசாரணைகளின் அடிப்படையில் காரின் சாரதி மாத்தறை தோட்டமுன பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 29 வயதுடையவர் எனவும் STF தெரிவித்துள்ளது.
மேலும், கொலையை மேற்கொள்வதற்காக கண்காணிப்பாளராக செயற்பட்டதாக நம்பப்படும் 26 வயதுடைய நபர் ஒருவரும் கேகனதுர பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஆரம்ப விசாரணைகளின் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக மாத்தறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
- இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் தலைநகரை நோக்கி பேரணி

- சிக்கலில் இலங்கை ரயில் திணைக்களம்

- பாதுகாப்பு நலநிதிகளை ஒருங்கிணைப்பது குறித்து அரசாங்கம் ஆராய்கிறது

- 2026–2029 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்து இலங்கையும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் விவாதித்தன

- ஞானசார தேரருக்கு மீதமுள்ள சிறைத் தண்டனையை அமல்படுத்த மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு








