இனம் ஒன்றின் சாபத்தில் இடிகிறது இரத்த காட்டேறிகள்

Spread the love

இனம் ஒன்றின் சாபத்தில் இடிகிறது இரத்த காட்டேறிகள்

ஒன்று பட்ட இலங்கைக்குள் ஒன்று பட்டு வாழ்ந்து வந்த தமிழர்களை

இனவாதம் மேலோங்கி அவர்களை அடிமையாக்கி விலங்குகளை விட கீழ் நிலையில் நடத்தியதன் விளைவு ஆயுத போராட்டம் வெடித்தது

அவ்விதம் முப்பது வருடங்களாகி இலங்கையில் நடந்தேறிய உள் நாட்டு போரில் பல லட்சம் மக்கள் பலியாகினர்


குறிப்பாக இதில் தமிழர்களே லட்ச கணக்கில் கொன்று குவித்தது சிங்கள அரச பயங்கரவாதம்

இனவெறியை கக்கி தமிழர்களை ஒரு பயங்கரவாதிகளாக சித்தரித்து அரியணையில் ஆண்டு வந்த தலைமைகளுக்கு இப்பொழுது நெத்தியடி வழங்க பட்டுள்ளது

இவர்கள் யார் என்கின்ற முகமூடி கிழிக்க பட்டு நாம் எல்லாம் இலங்கை குடிகள் என்ற நிலையில் மக்கள்,ஒன்று பட்டு எழும் காலம் பிறந்திருக்கிறது

தமது தேவைகளை நிறைவு செய்து கொள்ள அரசியலை ஆயுதமாக பயன்படுத்தி அப்பாவிகளை தமது இரைக்கு பயன் படுத்தி வந்தவர்கள் இன்று அழிவின் விளிம்பில்

புலிகள் என்ற போர்வையில் முள்ளி வாய்க்களில் ஒட்டு மொத்த தமிழனத்தை கொன்று குவித்து நெஞ்சு நிமிர்த்தி ஆடிய மகிந்தா குடும்ப ஆட்சி இன்று அதே

மக்கள் சாபத்தின் விளைவால் அதே சிங்கள மக்களினால் கண்முன்னே விரட்டியடிக்க படும் காலம் அரங்கேறியுள்ளது

இராணுவ சர்வாதிகாரத்தில் சிவில் நிர்வாகத்தை ஆட்சி கொள்ள முனைந்த இடி அமீன்கள் இன்று தமது பதவிகளை உதறி விட்டு தப்பி ஓடும் நிலைக்கு தள்ள பட்டுள்ளன

இனம் ஒன்றின் சாபத்தில் இடிகிறது இரத்த காட்டேறிகள்

வாரிசு அரசியலை முன் நகர்த்த முனைந்தவர்களுக்கு இன்று பெரும் இடி வீழ்ந்துள்ளது

அழுகுரல்களின் மேல் ஏறி அவர்களின் இரத்தம் குடித்து கதற கதற கொன்று குவித்து ஏப்பம் இட்ட சிங்கள அரச பயங்கரவாதம் இன்று வீதி வந்த மக்களின் செருப்புகளில் மிதிபட்டு ஓலமிடுகிறது

இந்த ஓலம்தான் அன்று எம் மக்களின் வாழ்வாக இருந்தது ,அரசன் அன்றே அறுப்பன் தெய்வம் நின்று அறுக்கும் என்பது இது தான் போலும்

இலங்கையில் மகிந்த ஆட்சி இல்லாது ஒழியும் காலம் வரும் என 2009 ஆம் ஆண்டின் இறுதியிலேயே நாம் தொடராக கூறி வந்தோம் ,அன்று நம்மை

நயப்புடைத்தவர்கள் இன்று எமது எதிர்வு கூறல் தெளிவானது என்பதை புரிந்திருப்பீர்கள்

கடாபி வீழ்ந்த போதும் எச்சரித்தோம், எவர் கேட்டார் ,மகிந்தவின் ஊதுகுழல்களாக விளஙகியவர்வர்களும்


நாட்டின் எதிர்காலத்தை நினைத்து பார்க்க மறந்ததன் விளைவு இன்று இருந்த இடம் தெரியாதது காணாமல் போகும் நிலைக்கு ராஜபக்ச குடும்ப ஆட்சி மாறிவிட்டது

முற்போக்கை முன் விரிக்க மறந்தால் பிற்போக்கு பிடரியில் அடிக்கும் என்பது இது தான் .

  • வன்னி மைந்தன் –

Leave a Reply