இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு 1,783 பேர் பலி

Spread the love

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு 1,783 பேர் பலி

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,783 ஆக இன்று உயர்வடைந்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் இந்திய

இரசாங்கம் மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன. எனினும், பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு

ஏற்ப கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்று அரசு தெரிவித்து வருகிறது.

கொரோனா பாதிப்புக்கு, பலி எண்ணிக்கை 1,694 ஆக நேற்று உயர்வடைந்து இருந்தது. 14 ஆயிரத்து 183 பேர் குணமடைந்தும், 33,514 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என

தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 49 ஆயிரத்து 391 ஆக உயர்வடைந்து இருந்தது.

இந்த நிலையில், இந்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கொரோனா பாதிப்புக்கு 89 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 1,694ல்

    இருந்து 1,783 ஆக உயர்வடைந்து உள்ளது. 15 ஆயிரத்து 266 பேர் குணமடைந்தும், 35,902 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா

    வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 49 ஆயிரத்து 391ல் இருந்து 52 ஆயிரத்து 952 ஆக உயர்வடைந்து உள்ளது.

    இதேவேளை தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,829 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 1,516

    பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு 35 பேர் பலியாகியிருந்தனர்.

    அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 324 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து

      கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2,328 ஆக அதிகரித்துள்ளது.

      இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தார்.

      பூந்தமல்லியை சேர்ந்த 56 வயதான பெண் ஓராண்டாக சிறுநீரகப் பிரச்சனையால் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

      கடந்த 1-ந்தேதி உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு 5-ந்தேதி தொற்று உறுதி செய்யப்பட்டது.

      அவர் மரணமடைந்ததை அடுத்து கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 36-ஆக உயர்ந்தது.

      இந்தியாவில் கொரோனா
      இந்தியாவில் கொரோனா

          Leave a Reply