ஆற்றுக்குள் வீழ்ந்த கெப் வாகனம்
ஆற்றுக்குள் வீழ்ந்த கெப் வாகனம் கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எஸ்வத்த-மானகட வீதியின் ரம்புகே வத்த கிளை வீதியில் தும்மோதர ஆற்றைக் கடக்கச் சென்ற கெப் வாகனமொன்று நீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
இந்த விபத்து நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளதுடன், கெப் வாகனம் சுமார் 50 மீற்றர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், சம்பவத்தின் போது வண்டியில் சாரதி உட்பட நான்கு பேர் பயணித்துள்ளதோடு, அவர்களில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் பலல்கொட்டுவ மற்றும் கிரிபத்கொட பிரதேசத்தை சேர்ந்த 27 மற்றும் 69 வயதுடையவர்களாவர்.
சடலங்கள் அவிசாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

- ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்ற வேண்டாம் என சிறைத்துறை ஆணையரை கோட்டே சங்க சபை வலியுறுத்துகிறது

- குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை பராமரிக்குமாறு நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சு அறிவுறுத்துகிறது

- உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமனம்

- சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத பயணத்திற்கு இலங்கையும் தாய்லாந்தும் உடன்பாடு








