அமைச்சரின் வாகனம் மோதி காயமடைந்தவர் மரணம்
கடந்த மாதம் 15ஆம் திகதியன்று இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் அதிசொகுசு வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை மரணமடைந்தார்.
படுகாயமடைந்த அவர் குருநாகல் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையிலேயே 15 நாட்களுக்குப் பின்னர் நேற்று முன்திகம் (30) மரணமடைந்தார்.
புத்தளம் முள்ளிப்புரம் மீன்பிடி கிராமத்தில் வசிக்கும் மொஹமட் சிஹாம் (வயது 48) என்பவரே மரணமடைந்துள்ளார்.
அமைச்சரின் வாகனம் மோதி காயமடைந்தவர் மரணம்
மொஹமட் சிஹாம் செலுத்திவந்த சிறிய ரக வாகனத்தை இராஜாங்க அமைச்சரின் வாகனம் புத்தளம் நகரத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது முந்திச் செல்ல முற்பட்ட வேளையிலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்தவர், புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், குருநாகல் வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டார்.
அங்கு அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு,
15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே மரணமடைந்தார்.
- வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த மொன்டானா ஆளுநர் இலங்கை செல்கிறார்

- கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டன

- சஷீந்திர ராஜபக்ச மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனுவை கொழும்பு உயர் நீதிமன்றம் நிராகரித்தது

- ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டதை ஜனதாவாதி கூட்டு எதிர்க்கட்சி கண்டிக்கிறது

- மாகசின் சிறையில் சிறப்புப் பாதுகாப்பில் ஷிராந்தி ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ளார்










