அமெரிக்கா தூதரகம் மீது-மீளவும் ஈரான் ஏவுகணை தாக்குதல்

Spread the love

ஈராக் -அமெரிக்கா தூதரகம் மீது-மீளவும் ஈரான் ஏவுகணை தாக்குதல்

கடந்த தினம் ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரக கிரீன் சோன் green zone பகுதியில் இரண்டு Katyusha rockets தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளது ,

இந்த தாக்குதலில் எவருக்கும் சேதங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்க படுகிறது .


இந்த பகுதியில் தான் அமெரிக்கா உள்ளிட்ட பல் நாட்டு படைகள் குடி கொண்டுள்ளன .

இவரக்ளை இலக்கு வைத்தே ஈரான் இந்த திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது .


இங்கிருந்து அமெரிக்காவின் இறுதி சிப்பாய் உள்ளவரை அவர்கள் மீது தாக்குதல் நடத்த படும் மேலும் அவர்களை

கண்ணுறங்க விட மாட்டோம் என ஈரான் புரட்சி படை அறிவித்துள்ளது

ஈரானின் தேசிய பாதுகாப்பிற்கு அமெரிக்கா படைகள் இங்கு நிலைகொண்டுள்ளது பெரும் அச்சுறுத்தல் என்ற நிலையில் ஈரான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது .

ஈரான் மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்க படும் என அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் அறிவித்து சில மணி

நேரங்களில் இந்த தாக்குதல் அமெரிக்கா படைகள் மீது நடத்த பட்டுள்ளது .

நாங்கள் பெறுமதியான இராணுவம் ,எம்மிடம் நவீன ஏவுகணைகள் ,மற்றும் கைபர் ரக ஏவுகணைகள் உள்ளன என டிரம்ப் நினைவூட்டி மிரட்டி சென்றார் .

அவற்றை எல்லாம் பொருட் படுத்தாது ஈரான் தொடர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது
மேலும் ஜிகாத் தாக்குதல் நடத்த கூடும் எனவும் எதிர்பார்க்க படுகிறது

அமெரிக்கா பாயங்கரவாதிகளிற்கு எவரெல்லாம் அடைக்கலம் கொடுக்கிறார்களோ அவர்கள் மீது எல்லாம்

தாக்குதல் நடத்த படும் என ஈரான் பகிரங்கமாக அறிவித்து தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது ,

இவ்விதம் தாக்குதல் தொடர்ந்தால் இஸ்ரேல் ,அமெரிக்கா இணைந்து தாக்குதல் நடத்தும் நிலை மேலும் ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது

அமெரிக்கா அதிபர் செய்தியாளர் சந்திப்பின் பின்னர் தங்கத்தின் விலை சடுதி என வீழ்ச்சி கண்டது

,அதேபோலவே கச்சாய் எண்ணெயின்விலையும் வீழ்ச்சி அடைந்ததது .

ஆனால் ஈரான் தாக்குதலை அடுத்து மீளவும் அவை ஏற்றம் காணலாம் என எதிர் பார்க்க படுகிறது

எமது பழிவாங்குதல் தொடரும் ,அமெரிக்கா பயங்கரவாதிகள் உறக்கம் கொள்ள முடியாது என ஈரான் மீளவும் சூளுரைத்து தாக்குதல்களை நடத்தி வருகிறது .

இந்த தாக்குதல்களை அடுத்து மீளவும் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதட்ட அதிகரித்துள்ளது,


இஸ்ரேல் அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து தாக்குதல் நடத்தும் அபாயம் மீளவும் எழுந்துள்ளது

நாளை அமெரிக்காவின் மறு பதிலடி எவ்விதம் இருக்கும் என்பதை பார்த்தே மிகுதி விடயங்கள் தெரியவரும் .

அமெரிக்கா ஈரான் மீது திறந்தவெளி போரை நடத்தும் நிலை ஏற்படும் என்றே எதிர்பார்க்க படுகிறது .

கழியும் நிமிடங்கள் மீளவும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளன .

  • வன்னி மைந்தன் –
அமெரிக்கா தூதரகம் மீது
அமெரிக்கா தூதரகம் மீது

Leave a Reply