அமானுஷ்யமான சத்தத்தால் மக்கள் பீதி
மனிதத் தொடர்பு இல்லாத, மனிதப் புலன்களுக்கு அப்பாற்பட்ட, மனித சக்திக்கு மீறியதே அமானுஷ்யமாகும்.
அவ்வாறு நிலத்தின் கீழ் அமானுஷ்யமான சத்தம் கேட்பதால் மக்கள் அச்சத்துடன் இருக்கவேண்டிய நிலைமை நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது.
நுவரெலியா மாவட்டத்திலுள்ள கொத்மலை வேத்தலாவ எனும் கிராமத்தில் நிலத்தின் கீழ் நீர் செல்வது உட்பட பல்வேறு விதமான அமானுஷ்யமான சத்தம் கேட்பதாக கிராம மக்கள் தகவல் கொடுத்துள்ளனர்.
அந்த தகவலுக்கு அமைய அக்கிராமத்தில் வசிக்கும் 50 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இரவு நேரத்தில் மட்டும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க
ஞாயிற்றுக்கிழமை ( 15) முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்துள்ளார்.
அமானுஷ்யமான சத்தத்தால் மக்கள் பீதி
கொத்மலை வேத்தலாவ கிராமத்தில் வாழும் மக்கள் வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கு அமைய இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்தார்.
இந்த கிராமமானது மலைகள் அற்ற ஒரு சமவெளிப் பகுதியில் கொத்மலை நீர்தேக்கத்திற்கு அருகிலும் அமைந்துள்ளதாகவும் தெரிவித்த நுவரெலியா
மாவட்ட செயலாளர் நந்தன கலபொட, அங்கு வழமையாக நிலத்துக்கு கீழ் இருந்து பல்வேறு சத்தங்கள் கேட்பதாக தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றன.
இந்நிலைமையானது அச்சப்படுவதற்கான காரணியாக இதுவரை அடையாளம் எதுவும் காணப்படவில்லை. எனவும், எனினும் நுவரெலியா
மாவட்ட கட்டிடம் மற்றும் நிலம் ஆய்வு மைய அதிகாரிகளின் உதவியோடு குறித்த கிராமம் தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுக்க நடவடிக்க எடுக்கப்படவுள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட மேலும் தெரிவித்தார்.
- ஞானசார தேரரின் விடுதலையைக் கோரும் பேரணி ஐந்தாம் நாளை எட்டியது
- பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்
- பசில் ராஜபக்சவைக் கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது
- இன்று தீவின் சில பகுதிகளில் கனமழை
- அனைத்து மாகாணங்களிலும் கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை
- அனோஜன் சிவரசாவின் மரண தண்டனையை ரத்து செய்த சவூதி
- சுரேஷ் சல்லே வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குறுக்கீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்தது
- 9 மாதங்களில் 360-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை
- பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்
- சீனாவும் ரஷ்யாவும் ஈரானுக்கு ‘சற்றும்’ உதவுவதாகத் தாம் நம்பவில்லை என டிரம்ப் கூறுகிறார்

















