அடுக்குமாடி குடியிருப்புகள் டொலர்களில் விற்பனை
நகர அபிவிருத்தி அதிகாரசபையால் (UDA) நிர்மாணிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு டொலர்களில்
விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் மேலும் மூன்று வீடுகள் விற்கப்பட்டுள்ளன.
இந்த மூன்று அடுக்குமாடி குடியிருப்புகளும் 1 இலட்சத்து 43 ஆயிரத்து 700 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இவை பன்னிபிட்டிய, கொட்டாவ மற்றும் மாலபே பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
அடுக்குமாடி குடியிருப்புகள் டொலர்களில் விற்பனை
நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்காக கட்டப்பட்ட இந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் மேலும் 10 வீடுகளை வாங்குவதற்கு விண்ணப்பங்கள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன.
அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரித்தானியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் உள்ள இலங்கை புலம் பெயர்ந்த
தொழிலாளர்களால்
குறித்த விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- நாமல் ராஜபக்ச ஆஜராவதற்கு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பாதுகாப்பு

- மூன்று மாவட்டங்களுக்கு நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- பராமரிப்புப் பணிகளுக்காக அடுத்த வாரம் பொல்கொல்ல அணை காலி

- மகிந்தா மனைவி மீது பாய்ந்த விசாரனை

- ஞானசார தேரோ அவதூறு வழக்கு செப்டம்பர் 30 அன்று மீண்டும் விசாரணை








