வெளிநாட்டில் புலிகள் அமைப்புக்கள் – காணாமல் போனது எப்படி தெரியுமா ..?


வெளிநாட்டில் புலிகள் அமைப்புக்கள் – காணாமல் போனது எப்படி தெரியுமா ..?

இலங்கையில் இறுதி யுத்தம் அகோரமாக இடம் பெற்று தமிழ் மக்கள் மற்றும் அந்த மக்களின் விடுதலைக்கு போராடிய தமிழீழ விடுதலை புலிகள் முற்றாக அழிக்க பட்டனர்

புலிகளுக்கு ஆதரவு வழங்கிய மக்கள் காணாமல் ஆக்க பட்டனர் ,முன்னால் போராளிகள் சிறை படுத்த பட்டனர் ,உலக நாடுளின்

அழுத்தம் காரணமாக 12 ஆயிரம் பேருக்கு புனர்வாழ்வு அளிக்க பட்டு விடுதலை செய்ய பட்டனர் .

அவ்வாறு விடுவிக்க பட்ட போராளிகளில் பல்லாயிரம் பேர் பெரும் பொருளாதார ,வாழ்வியல் ரீதியில் தவித்து வருகின்றனர்

,தாய் மண்ணில் தமிழீழ விடுதலை புலிகள் பலம் பெறுவதற்கு வெளி நாடுகளில் உருவாக்க பட்ட புலிகளின் சர்வதேச வலையமைப்பு நிதி மூலம் பலம் பெற்றன ,

இவர்களுக்கு அவர் தம் மொழி பேசும் பூர்விக தமிழ் குடிகள் நிதிகளை அள்ளி வழங்கினர் ,அதன் பயனாக புலிகள், மக்கள் பலம் பெற்ற விடுதலை புலிகள் தேசிய அமைப்பாக விளங்கினர் .

அவ்வாறான அந்த போராளிகள் அமைப்பை பலம் பெற செய்த அதே மக்கள் ,இறுதி போரின் பின்னர் ,அவர்கள் சொத்துக்களை கொள்ளையடித்து ஏப்பம் விடும் நிலைக்கு மாற்றம் பெற்றனர் .

அப்பாவி மக்கள் பெயர்களில் வீடுகள் ,கடைகள் ,எரிபொருள் நிலையங்கள் ,வணிக தளங்கள் என பல்துறை சார்ந்து வாங்க பட்டன

அனைத்து பொருட்களையும் இந்த தனியார், புலிகள் பெயரால் சுருட்டி கொண்டன

இவர்கேள இப்பொழுது ஐரோப்பிய தழுவிய வெளிநாடுகளில் பருத்த முதலைகளாக புலிகள் சொத்துக்களை அனுபவித்த வண்ணம் உள்ளனர்

இன்று அந்த போருக்கு போராடிய போராளிகள் உண்ண வழியின்றி உருக்குலைந்து இறக்கும் நிலையில் உள்ளனர் ,அவ்வாறு இறந்தும் வருகின்றனர் .

இலங்கை சிங்கள பவுத்த பேரினவாத அரசுகளுடன் ஒட்டுறவாடி ,அவர் தம் பணத்தை வாங்கி எப்ப விட்டவாறு இந்த கூட்டம் அலைகிறது

மக்களின் தேசிய விடுதலைக்கு போராடிய அமைப்பின் பெயரால் ,மக்கள் தமிழ் தேசியம் பேசிய படி தொடர்ந்து கழுத்தறுப்புகள் இடம் பெருகினறன்

இவற்றை உடைத்து ,வெளியில் கொண்டு வருவது யார் …?அதனை எவ்வாறு நகர்த்த வேண்டும் என்பதனை மக்கள் சிந்திக்க வேண்டும் ,

மக்கள் ஆதரவின் ஊடாகவே இதனை செய்திட முடியும் .
தமிழர் தேசத்தின் ஒப்பற்ற மா பெரும் தலைவனாக விளங்கும்

பிரபாகரன் மக்களே , நாம் துணிந்து செயலாற்ற வேண்டும் ,உண்மைகளை ,இவர்கள் விடும் தவறுகளை இடித்து உரைக்கின்ற

நிலைக்கு எழுச்சி பெற வேண்டும், அப்பொழுது தான் எம்மை ,ஏமாற்றும் சக்திகளை தகர்த்து எறிந்து ஒன்று பட்ட தேசிய மக்களாக பயணிக்க முடியும்

இந்த அமைப்புக்கள் எவ்வாறு வீழ்த்த பட்டன ,அதன் இயக்கம் யார் என்பது தொடர்பாக தொடராக நாம் அம்பல படுத்து கிறோம்

,உறங்கு நிலையில் மக்களை வைத்து ,சினிமா மோகத்தில் மூழ்கடித்து ,அவர்கள் புரட்சிகர போராடும் சிந்தனைகளை

மழுங்கடிக்க நடந்து வரும் அந்த உள்ளக உளவு விளையாட்டை வரும் நாட்களில் தொடராக அவிழ்த்து வைக்கிறோம் .

ஒன்று படுவோம் வென்று நிமிர்வோம் ,தமிழர்களே எழுச்சி கொள்க ,எழுந்து நடப்போம் .- வன்னி மைந்தன் –

வெளிநாட்டில் புலிகள் அமைப்புக்கள்
வெளிநாட்டில் புலிகள் அமைப்புக்கள்