விவேக்கா இது..? ஷாக்கான ரசிகர்கள்


விவேக்கா இது..? ஷாக்கான ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவரான

விவேக்கின் சால்ட் அண்ட் பெப்பர் லுக் போட்டோஷூட் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் விவேக். காமெடி

நடிகர் மட்டுமில்லாமல் குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தி இருக்கிறார்.

கருத்தோடு காமெடி சொல்லும் இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

மேலும் தமிழ் சினிமாவில் சின்ன கலைவாணர் என்ற அழைக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில், நடிகர் விவேக் போட்டோஷூட் ஒன்றை எடுத்துள்ளார்.

வெள்ளை நிற உடையில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஸ்டைலிஷாக

இருக்கும் விவேக்கின் இந்த போட்டோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

விவேக்கின் புதிய தோற்றம்

என்னுடைய இந்த தோற்றத்திற்கு முழு காரணம் காஸ்ட்யூம் ஸ்டைலிஷ்

சத்யாவும், அவர் குழுவும் தான் காரணம் என்று கூறி அவர்களுக்கு நன்றி கூறியிருக்கிறார் விவேக்.