இது தான் வாழ்வு …!
தோளுக்கு மாலையா
தோட்ட பூவே வாறியா ..?
வாழை நாரில
வந்து சிக்கிறியா …?
கல்யாண பந்தலிலே
காட்சிக்கு நிக்கிறியா ..?
கூந்தல் மேவியே
குலவி ஆடுறியா ..?
அழகாய் பூத்தாய்
ஆயூளை பறித்தான் …
உயிரு போகுமுன்னே
உலவுறாய் அழகாய் தான் …
சிரித்து மலர்ந்து
சிறகு உடைந்து …
வீழ்ந்து கருகி
வீழ்ந்தாய் நொந்து ….
வாசல் பூவே
வாழ்வு இதுவாச்சு …
அழகாய் பூத்தென்ன
ஆயூள் முடிந்தாச்சு …!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -11/03/2019