திருமணத்திற்கு சென்ற வான் சிதறல் = நடந்த சோகம்

இதனை SHARE பண்ணுங்க

திருமணத்திற்கு சென்ற வான் சிதறல் = நடந்த சோகம்

பதிவு திருமணத்திற்காக வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ஹயஸ் வாகனம்

விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வவுனியா – கொழும்பு வீதியில் உள்ள கல்கமுக பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி

வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியுடன் ஹயஸ் வாகனம் இன்று (18) அதிகாலை மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இடம்பெறவிருந்த தமது புதல்வியில் பதிவு திருமணத்திற்காக வவுனியா,

தோணிக்கல் பகுதியில் இருந்து சென்ற குடும்பத்தினரே விபத்துக்குள்ளாகியுள்ளனர். விபத்தில்

வாகன சாரதி மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் என 6 பேர் படுகாயமடைந்த நிலையில் கல்கமுக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான இரு வாகனங்களும் கல்கமுவ பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து

செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கல்கமுக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


    இதனை SHARE பண்ணுங்க

    Author: நலன் விரும்பி

    Leave a Reply