வாடகை செலுத்துங்கள் அல்லது வெளியேறுங்கள்- ஜனாதிபதி அதிரடி
வாடகை செலுத்துங்கள் அல்லது வெளியேறுங்கள்- ஜனாதிபதி அதிரடி முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களையும் அரசாங்கம் மீளப் பெற்றுக்கொள்ளும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இல்லத்தின் நிலத்தின் மதிப்பைத் தவிர்த்து மாதாந்த வாடகை
ரூ. 4.6 மில்லியன் என்றார். முன்னாள் ஜனாதிபதிகள் குடியிருப்பை காலி செய்யவோ அல்லது வாடகையை தாங்களே செலுத்தவோ முடியுமென ஜனாதிபதி மேலும் கூறினார்.
“தற்போதுள்ள சட்டங்களின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு குடியிருப்பு அல்லது அவர்களது சம்பளத்தில் 1/3 பங்கு உரிமை உண்டு.
அரசாங்கம் இப்போது இந்த நன்மையை ரூ. 30,000 ரொக்க கொடுப்பனவாக மட்டுப்படுத்தும்.
இது அவர்களின் சம்பளத்தில் 1/3 ஆகும்” என்று கட்டுகுருந்தவில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகை, கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரிமாளிகை தவிர்ந்த அனைத்து அமைச்சு
பங்களாக்களும் ஹோட்டல் திட்டங்களுக்காக அல்லது வேறு பொருத்தமான பயன்பாட்டிற்காக மீளப் பயன்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
- சவுதி ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தல்

- கத்தார் மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட விமானியின் உடல் திருப்பி ஒப்படைக்கப்படும் ஈரான்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது








