வலயக் கல்வி அலுவலகத்தின் கழிவறையில் சடலம்
கம்பளை வலயக் கல்வி அலுவலகத்தின் மலசலகூடத்தில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கம்பளை கல்வி அலுவலகத்தில் உதவியாளராக கடமையாற்றிய கம்பளை ரத்மல்கடுவ பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் கம்பளை பொலிஸ் நிலையத்தில் நேற்று (13) மாலை முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உறவினர்களால் சடலம் அடையாளம் காணப்பட்டதை அடுத்து கம்பளை மரண விசாரணை அதிகாரியின் உத்தரவின் பேரில் பிரேத பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- 2025 ஜிஐடி தேர்வு முடிவுகள் வெளியீடு
- செயற்கையாகப் பழங்களைப் பழுக்கவைக்க நச்சு இரசாயனங்களைப் பயன்படுத் தடை
- தித்வா புயலால் அனாதையாக்கப்பட்ட குழந்தைகளுக்கான மாதாந்திர உதவித்தொகை
- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குவைத்துக்கான விமான சேவை நிறுத்தம்
- கடந்த 24 மணி நேரத்தில் டெங்கு தொடர்பான மூன்று மரணங்கள்
- வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தில் இந்தியா திருத்தம்
- உண்மையான தலைமை என்பது அதிகாரத்தைப் பற்றியதல்ல, சேவையைப் பற்றியது என்று பிரதமர்
- தீவின் சில பகுதிகளில் இன்று பலமுறை மழை பெய்யும்
- முன்னாள் காவல்துறைத் தலைவர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகள்
- பேருந்துகள் உட்பட அனைத்து பொதுப் போக்குவரத்து வாகனங்களும் ஆய்வு
















