லண்டனில் 14 நாள் வீட்டில் தனிமை படுத்த மறுத்த தமிழ் பெண்ணுக்கு 10 ஆயிரம் தண்டம்


லண்டனில் 14 நாள் வீட்டில் தனிமை படுத்த மறுத்த தமிழ் பெண்ணுக்கு 10 ஆயிரம் தண்டம்

இலங்கையில் இருந்து லண்டனுக்கு ஸ்பான்சர் மூலம் வருகை தந்த தமிழ்

இளம் பெண் ஒருவர் ,கணவருடன் இணைந்து 14 நாட்களுக்கு வீட்டில் சுயதனிமை படுத்தி தங்கி இருக்க மறுத்து ,வெளியில் நடமாடியுள்ளார் .

இதனை அவதானித்த அதிகாரிகள் அவருக்கு பத்தாயிரம் பவுண்டுகள்

தண்டம் அறவிட்டுள்ளனர் .இவர்களை கண்காணித்து வந்தவர்களினாலே இந்த அபராத தொகை விதிக்க பட்டுள்ளது ,.

தற்பொழுது அமூல் படுத்த பட்ட சட்ட பிரகாரம் ஆறு பேருக்கு மேல் விழாக்களில் நபர்கள் கூட முடியாது ,மேலும் அயலவர்கள்

,அயல் வீட்டாருடன் உறவாடவோ ,செல்லவோ முடியாது என்ற விதிகள் ,

[related_posts_by_tax]

உள்ளது ,இதனை அலட்சியம் செய்து உலாவும் நம்ம தமிழர்கள் இவ்விதம் சிக்கி தவித்து வருகின்றனர்

அதுபோலவே பத்துமணிக்கு பின்னர்உணவகத்தை திறந்து வியாபாரம் செய்த தமிழர் கடை ஒன்றுக்கும் தண்டம் அறவிட பட்டுள்ளது .

இக்காலத்தில் அரசு விதித்துள்ள விதிகளை மீறி செயல்படின் அது கிரிமினல்

குற்றமாகிறது ,அவ்விதம் பாதிக்க பட்ட சில தமிழர்கள் கருத்துக்கள் இவ்விதமாக உள்ளனவாம் .

கடந்த தினம் நோயின் தாக்குதலில் சிக்கி 141 பேர் பலியாகியுள்ளனர் ,

ஆபத்தின் அபாயத்தை உணர மறுப்பவர்கள் ,..இவ்விதம் சிக்கிதவித்து வருகின்றமை குறிப்பிடதக்கது ,

மக்களே எச்சரிக்கை ,அரசு கூறும் விதிகளை பின் பற்றுங்கள் ,குளிர்காலத்தில்

நோயின் தாக்குதல் நாள் ஒன்றுக்கு நாற்பது ஆயிரத்தை கடக்கும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

நத்தார் தினத்திற்கு முன்பாக நாடு முழுமையாக அடித்து பூட்டும் நிகழ்வு இடம்பெறும் என்றே எதிர் பார்க்க படுகிறது ,

லண்டன் மாநகரம் அதிக நோயாளர்களை கொண்ட இரண்டாவது புள்ளியில்

நிற்கிறது ,இதனை அடுத்து சில சிட்டிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்க

பட்டு அடித்து மூட படவுள்ளதாக லண்டன் மேயர் அறிவித்துள்ளமை இங்கே கவனிக்க தக்கது,வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம்