லண்டனில் புதுக்குடியிருப்பு பழைய மாணவர் கலை விழா – video


லண்டனில் புதுக்குடியிருப்பு பழைய மாணவர் கலை விழா – video

நேற்று சனிக்கிளை பிரிட்டன் -லண்டன் லூசியம் சிவன் ஆலய மண்படத்தில் புதுக்குடியிருப்பு மகாவித்தியாலய

பழையமாணவர் ஐக்கியராச்சியம் ,என்ற அமைப்பினரால் ஏற்பாடு செய்ய பட்ட கலை விழா நிகழ்வுகள் இடம்பெற்றன .

இதில் ஆடல் ,பாடல் ,பேச்சு,கவிதை,என தமிழர் கலாச்சார விழுமியங்களை தொட்டு இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன .

மேற்படி நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினரும் ,வைத்திய

கலாநிதியுமான சிவமோகன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார் .

மண்டபம் நிறைந்த மக்கள் வெள்ளத்தில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது ,மிகவும் ஒன்றுபட்ட நிலையில் ,தமதுகுடும்ப

நிகழ்வு போன்று ஒவொரு மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்ததை கண்டு வியந்தோம் .

கடல் கடந்து வந்த பொழுதும் ,மொழியையையும் ,அதன் கலாச்சாரத்தையும் மறவாது தொடர்ந்து பேணி காக்கும்

செயலில் இங்கு பிறந்து வளர்ந்த எமது சிறுவர்கள் ,இளையவர்கள் ஈடு பட்டதை காண முடிந்தது .

தலைவர் ,செயலர் சிறப்புரைகளை தொடர்ந்து சிறப்பு விருந்தினரும் தமது உரையினை ஆற்றினார் ,

அதில் சங்கத்தின் தோற்றம், நலன் ,மக்கள் ஒருமைப்பாடு,மற்றும் தேசிய அரசியல் தொடர்பாகவும் அவரது பேச்சு விரிந்து பரந்து சென்றது .

மிக ஆளுமைகள் கூடிய நெறிப்படுத்திய நிகழ்வு இனிதே மறு மலர்ச்சியுடன் நிறைவு பெற்றது .
அங்கு நிகழந்த நிகழ்வுகளின் காட்சி தொகுப்புகளில் சில ….

  • வன்னி மைந்தன் –
லண்டனில் புதுக்குடியிருப்பு
லண்டனில் புதுக்குடியிருப்பு
லண்டனில் புதுக்குடியிருப்பு பழைய மாணவர் கலை விழா – video

லண்டனில் புதுக்குடியிருப்பு பழைய மாணவர் கலை விழா – video

Gepostet von ethiri.com am Sonntag, 26. Januar 2020