யானை தாக்கியதில் குடும்பஸ்தர் பலி
மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெள்ளக்கல்மலைப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர்
உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த மற்றுமொருவர் கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் சனிக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் இலுப்படிச்சேனை, வேப்பவெட்டுவான் வீதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 41 வயதுடைய கந்தையா கீர்த்திகுமார் என்பவரே உயிரிழந்துள்ளார். .
யானை தாக்கியதில் குடும்பஸ்தர் பலி
மாடு மேய்க்கச் சென்று மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் வேளையில் காட்டு யானை வழிமறித்துத்தாக்கியுள்ளதாகவும்
ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றய நபர் கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டு தீடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம் நஸீர் சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்
மேலும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- லங்கா சதோசா 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கிறது
- ஹோர்முஸ் ஜலசந்தி குறித்து விரைவில் ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்கா
- அஸ்வசூமா சம்பந்தப்பட்ட மாபெரும் மோசடி
- மோட்டார் சைக்கிள் விபத்துகளில் 749பேர் பலி
- பல பகுதிகளில் 75 மி.மீ-க்கு மேல் மழை
- சிறைச்சாலை அமைப்பு கடுமையான நெருக்கடியில் உள்ளது
- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ
- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது
- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி
- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி
















