மெகசின் சிறைச்சாலை வளவில் போதைப் பொருளுடன் பூனை


மெகசின் சிறைச்சாலை வளவில் போதைப் பொருளுடன் பூனை

ஹெரோயின் போதைப் பொருள் உள்ளிட்ட பொருட்களைக்

கொண்ட பொதி கழுத்தில் கட்டப்பட்டு மெகசின் சிறைச்சாலை வளவில்

காணப்பட்ட பூனை ஒன்றை சிறைச்சாலை அதிகாரிகள் கண்டுபிடிதுள்ளனர்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைக்காக பூனை தற்போது பொரள்ளை

பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துசார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு

அமைய குறித்த பூனை நேற்று (01) பிடிக்கப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, பூனையில் கழுத்தில் பொதியொன்று காணப்பட்டுள்ளது.

அதில் 1.7 கிராம் ஹெரோயின், இரண்டு சிம் அட்டைகள் மற்றும் Memory Cardry Card ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மெகசின் சிறைச்சாலை
மெகசின் சிறைச்சாலை