முட்டை கண்ணு பார்வை

முட்டை கண்ணு பார்வை
Spread the love

முட்டை கண்ணு பார்வை

முட்டை கண்னு பார்வையாலே
முத்தம் தந்து போறவளே
மூக் குத்தி வெட்குதடி
முத்தம் இங்கே சொக்குதடி

கட்டியணைக்கும் போதிலே
கரும் கூந்தல் விலகுதடி
வெட்கம் இல்லா தழுவ
வென் இதழ் தீண்டுதடி

கன்னம் இரண்டை வருடவே – தங்க
கழுத்து தூண்டுதடி
வண்ண நிலா வாடவே
வாலிபம் அழைக்குதடி

சொல்லி சொல்லி ஆறவே
சொந்தம் உன்னை தேடுதே
பந்தம் உன்னில் படரவே
பாயும் இங்கே காயுதே

நிலவே என்ன தயக்கம்
நீயும் வந்திடு
நீளம் நாங்கள் கடக்கவே
நிகழ்வுகள் செய்திடு !

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 31-05-2024

படம் ஒன்றை பார்த்த பொழுது வடித்தது.

facebook கவிதை பக்கம் இதில் அழுத்துங்க