மீண்டும் வெப் தொடரில் நடிக்கும் சமந்தா
தி பேமிலி மேன் 2’ வெப் தொடருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், நடிகை சமந்தா மீண்டும் ஒரு வெப் தொடரில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம்.
மீண்டும் வெப் தொடரில் நடிக்கும் சமந்தா
சமந்தா
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடர் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி உள்ளார். பிரபல பாலிவுட் இயக்குனர்களான ராஜ் மற்றும் டிகே
ஆகியோர் இந்த தொடரை இயக்கி இருந்தனர். பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே கடந்த வாரம் ஓடிடியில் வெளியான இந்த வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சமந்தா
இந்நிலையில், நடிகை சமந்தா மீண்டும் ஒரு வெப் தொடரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் அந்த வெப் தொடரை தயாரிக்க உள்ளதாக
கூறப்படுகிறது. மேலும் இந்த வெப் தொடரை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாக்க திட்டமிட்டுள்ளார்களாம். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
- சிரிய விமானப்படைத் தளம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக பஹ்ரைன் கூறுகிறது
- காசா உதவிப் பணியாளர் கொலை தொடர்பாக இஸ்ரேலிய தூதரை ஆஸ்திரேலியா அழைத்தது
- ஈரானுக்கு எதிராக அமெரிக்கா ‘பொருளாதாரப் போரை’த் தொடங்குகிறது
- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலின் E1 குடியேற்ற விரிவாக்கத்தை பிரிட்டன் கண்டிக்கிறது
- விடுதலைப் புலிகள் முகாம் குறித்த பொய்யான தகவல் தொடர்பாக நபர் கைது











