மீண்டும் இணையும் விஷால் – ஆர்யா


மீண்டும் இணையும் விஷால் – ஆர்யா

பாலா இயக்கத்தில் வெளியான ‘அவன் இவன்’ படத்தில் நடித்திருந்த விஷால் – ஆர்யா, தற்போது மீண்டும் புதிய படம் ஒன்றில் இணைந்து நடிக்க உள்ளனர்.

மீண்டும் இணையும் விஷால் – ஆர்யா
ஆர்யா, விஷால்


ஆக்‌ஷன்’ படத்தைத் தொடர்ந்து ‘சக்ரா’ மற்றும் ‘துப்பறிவாளன் 2’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஷால். இதில் ‘சக்ரா’ படத்தின் இறுதிக்கட்டப்

படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. ‘துப்பறிவாளன் 2’ படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு மட்டும்

முடிவடைந்துள்ளது. இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு, ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் விஷால்.

இதனைத் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மூலமாக தயாரிக்கவும் உள்ளார். தற்போது இந்தப் படத்தில் விஷாலுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு நடைபெற்று

வருகிறது. இதில் நாயகியாக ரீத்து வர்மாவும், வில்லனாக ஆர்யாவும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்யா, விஷால்

விஷால் – ஆர்யா இருவரும் இணைந்து பாலா இயக்கத்தில் வெளியான ‘அவன் இவன்’ படத்தில் நடித்துள்ளனர். அந்தப்

படத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கும் படமாக ஆனந்த் ஷங்கர் படம் அமைந்துள்ளது. இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கவுள்ளார்.