மாற்றி யோசி

இதனை SHARE பண்ணுங்க

மாற்றி யோசி

உன்னை போல் நானிருக்க
ஒரு போதும் முடியாது
என்னை போல் நீ இருக்க
எண்ண நீ கூடாது

மாற்றி சிந்திக்க
மனதை கொஞ்சம் மாற்று
மரணித்த பின்னாலும்
மன்றில் உனை ஏற்று

முடியாத ஒன்றை
முன்னேற்ற பழகு
உனக்கான விதி ஒன்றை
உலகில் நீ எழுது

தொட முடியா உச்சத்தை
தொட்டிட முனைந்தால்
தடை போட்ட வாயெல்லாம்
தண்ணீராய் கரையும்

ஒப்பிட்டு பார்க்கும்
ஓரத்தில் நிற்காதே
ஓட்ட முடியா உச்சத்தில்
ஓடி ஏற மறக்காதே

எவரையும் பின் தொடர
என்றும் நீ எண்ணாதே
உன்னை பின் தொடர
உலகை வைக்க மறக்காதே

வன்னி மைந்தன்
ஆக்கம் 12-12-2021


இதனை SHARE பண்ணுங்க

Leave a Reply