மனைவி பிள்ளைகளை பணயக்கைதிகளாக்கி நகைகள் திருட்டு
கற்பிட்டி – நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவக்கடுவ, கொலனி பிரதேசத்தில் உள்ள மரக்கறி விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர் ஒருவரின்
வீட்டில் ஆயுத முனையில் 1 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாவக்காடு – கொலனி பகுதியில் உள்ள குறித்த வர்த்தகரின் வீட்டிற்கு நேற்று (2) காலை கைத்துப்பாக்கிகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் அத்துமீறி
நுழைந்த இந்த ஆயுதக் கும்பல் முதலில் அங்கிருந்த தொழிலதிபரையும் , அவரது மனைவி உட்பட குடும்பத்தினரை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தனர் எனக் கூறப்படுகிறது.
மனைவி பிள்ளைகளை பணயக்கைதிகளாக்கி நகைகள் திருட்டு
இவ்வாறு, குறித்த வர்த்தகரின் மனைவி மற்றும் பிள்ளைகளை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த ஆயுதக் குழுவினர், அவர்களை கொலை
செய்யப் போவதாக மிரட்டியதுடன், வீட்டில் இருந்த பாதுகாப்பு பெட்டகத்தை வலுக்கட்டாயமாக திறந்துள்ளனர் என மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதனையடுத்து, வீட்டின் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த சுமார் 70 பவுன் தங்க நகைகள் மற்றும் 30 இலட்சம் ரூபா பணம் என்பனவற்றை
கொள்ளையடித்த ஆயுதக் குழுவினர், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸாரும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- கனடா எங்கள் மாநிலம் அமெரிக்கா அறிவிப்பு
- எதிரிகளுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை
- அமெரிக்க இராணுவத்தை பழிவாங்கிய டிரம்ப்
- ஹூதிகள் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற யேமன் அரசு
- வியட்நாம் ஏர்லைன்ஸ், வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையே நேரடி விமான சேவை
- இந்தியக் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஆறு பேர் பலி
- நாயறு கடற்கரையில் 51 வயது முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்
- நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது
- 2026 ஆம் ஆண்டுக்கான வரி வருவாய் இலக்கில் 60%-க்கும் மேல்
- பட்டம் விடும்போது குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்
- நெல் சந்தை சபை இதுவரை 33 666 மெட்ரிக் டன் நெல்லைக் கொள்முதல்
- லெபனான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேல் அச்சுறுத்தல்


















