மனைவி கள்ள காதலனை மடக்கிப்பிடித்து -கத்தியால் வெட்டிய கணவன்

இதனை SHARE பண்ணுங்க

மனைவி கள்ள தொடர்பு -கத்தியால் வெட்டிய கணவன்

தனது மனைவியை கூரிய ஆயுதங்களால் தாக்கிய சந்தேகநபரை 10,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 100,000 ரூபா சரீரப் பிணையில்  விடுவிக்குமாறு தம்புத்தேகம நீதவான் நுவன் கௌசல்ய உத்தரவிட்டார்.

இராஜாங்கனை பகுதியில் வசிக்கும் ஒருவரே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நிலையில் அவர் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அவரது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்துள்ளார்.

இதனை கேள்வியுற்ற சந்தேகநபர், வீட்டுக்கு அருகில் மறைந்திருந்து இரவு வேளையில் வீட்டிற்குள் சென்று இருவரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தன்று இரவு இராஜாங்கனை பொலிஸில் சரணடைந்த சந்தேகநபர், மேலதிக விசாரணைகளுக்காக நொச்சியாகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் இராஜாங்கனை மற்றும் நொச்சியாகம பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதால் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஸ்ரீ லால் மகேஷ் தலங்கல்ல, தமது கட்சிக்காரரை பிணையில் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் சந்தேகநபரை 10,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 100,000 ரூபா சரீரப் பிணையில்  விடுவிக்குமாறு தம்புத்தேகம நீதவான் நுவன் கௌசல்ய உத்தரவிட்டார்.


    இதனை SHARE பண்ணுங்க

    Author: நலன் விரும்பி

    Leave a Reply