மட்டு. போதனா வைத்தியசாலையில் 21 பேருக்கு கொரோனா

Spread the love

மட்டு. போதனா வைத்தியசாலையில் 21 பேருக்கு கொரோனா

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர்கள் 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் கே.கலாரஞ்சனி தெரிவித்தார்.

வைத்தியசாலை பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (12) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பாக மேலும் கருத்துரைத்த வைத்தியசாலை பணிப்பாளர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்

ஊழியர்கள் 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், நோயாளிகளுக்கு வைரஸ் பரவாமலும்

நோயாளிகளிருந்து ஊழியர்களுக்குப் பரவாமலும் தடுப்பதற்கு சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை, வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள், போதனா வைத்தியசாலைக்கு வருவதை தவிர்த்து,

அருகில் உள்ள வைத்தியசாலைகளில் தங்களுக்கான சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் கிளிக் வரும்

நோயாளிகள் தங்களது மருந்துகளை, கிராம சேவகர் ஊடாகவும் அல்லது 0653133330, 0653133331 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக பெற்றுக்கொள்ளுமாறும் அவர் அறிவித்தல் விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *