மங்கைகள் களம் புகுந்தது

மங்கைகள் களம் புகுந்தது
Spread the love

மங்கைகள் களம் புகுந்தது

மங்கைகள் களம் புகுந்தது
மணி மகுடம் அங்கு தரித்தது
வேங்கை தாமென சிலிர்த்தது
வெந்த தமிழோ மகிழ்ந்தது

புறநானூறு இங்கு பிறந்தது – புலி
புது சரிதம் இங்கு படைத்தது
எதுகை மோனையும் எழுந்தது
எழுதியே வரலாறு படைத்தது

குனிந்த தலை நிமிர்ந்தது – தமிழ்
குரல்கள் இன்று உயரந்தது
அகிலம் இன்று வியந்தது – கால்
ஆடு களம் சிறந்தது

முதல் கோல் நமக்கு
முடிவை எழுது உனக்கு
ஆடினர் மகிழ்வோ நமக்கு
அங்கையர் கன்னிகள் சிறப்பு

உதைத்தவன் கால்கள் உருண்டன
உதை பந்தில் அவை சுருண்டன
எதிர்த்தார் இன்று மிரண்டன
எதிர்காலம் உண்டு விழித்தன …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 08-06-2024