பெண் வழக்கறிஞர் கொலை
பெண் வழக்கறிஞர் கொலை ,2024 ஆம் ஆண்டு மிரிஹானவில் உள்ள அவரது வீட்டில் 36 வயதுடைய பெண் வழக்கறிஞர் கொல்லப்பட்ட வழக்கில் ஒரு
சாரதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம்
வருடத்திற்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒரு சாரதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் திங்கட்கிழமை (27) பிணை வழங்கியது.
வழக்கு விசாரணை மற்றும் பிரதிவாதிகள் இருவரின் சமர்ப்பிப்புகளையும் பரிசீலித்த மேல் நீதிமன்ற நீதிபதி லால் பண்டார, சந்தேகநபர் ஜெயநாத்
கடுமையான பிணை நிபந்தனை
தீரசிங்கவை கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க உத்தரவிட்டார்.
அதன்படி, சந்தேகநபரை தலா 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மூன்று சரீரப் பிணைகளுடன் ரூ. 500,000 ரொக்கப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.
சந்தேகநபருக்கு பயணத் தடையையும் விதித்த நீதிமன்றம், நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை மீறினால் பிணை ரத்து செய்யப்படும் என்று எச்சரித்தது.










