பிரிய முன்னர் அழும் விவாகரத்து
தாலி தந்தான் கேவல மாக்கி
தாரங்கள் உலவுவதோ ..?- வரும்
காலங்கள் கூடியே மகிழ்வு ஏறியே
காலங்கள் கழிந்திடுமோ …?
வாடியே கிடந்த வாழ்வினில் வந்தான்
வழியெங்கும் தூற்றுவதோ ..?- கொடும்
கேடுகள் தூவியே ஆடிடும் பெண்ணே – தாலி
கேள்வியே ஆகும் நன்றே ….
இணைந்தவர் பிரிதல் இதயத்தில் வலிகள்
இன்றே புரிந்து விடு – நாளை
கூடியே வந்தவர் கூவியே திரிவர்
குற்றங்கள் குழி தோண்டும்
ஆறாம் அறிவால் ஆள் மனம் ஒன்றை
ஆர தழுவி எழு – தவறும்
கால பிழையால் கசங்கும் வாழ்வில்
கண்ணீர் சுமையாகும் ….
ஆடவர் கூட கணவனும் ஓட
ஆக்கினை புரிகின்றீர் – ஊடல்
தெரிந்தும் மறைத்து தெரியா நடிக்கும்
தெளிந்தவன் கணவனடி……
![பிரிய முன்னர் அழும் விவாகரத்து](http://ethirinews.com/wp-content/uploads/2021/03/பிரிய-முன்னர்-அழும்-.....விவாகரத்து-550x366.jpg)
ஊரின் பழிக்கு உன்னை அழைக்கும்
ஊனம் கலைந்து விடு ….
வாழ்வு தேறின் வழியை விட்டு
வாழ பழகி விடு …..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -30/12/2017
வன்னி மைந்தன் கவிதைகள்