கொழும்பு – பொலிஸ் பகுதியில் கட்டடமொன்றில் பாரிய தீ சம்பவம்

இதனை SHARE பண்ணுங்க

கொழும்பு – பொலிஸ் பகுதியில் கட்டடமொன்றில் பாரிய தீ சம்பவம்

கொழும்பு – கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரீட் வீதி பகுதியல் கட்டடமொன்றில்

பாரிய தீ சம்பவம் இடம்பெற்றிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இன்று(20) காலை பாரிய சத்தத்துடன் இந்த தீ சம்பவ இடம் பெற்றுள்ளது.

பழைய குதிரை பந்தய திடலின் பார்வையாளர் அரங்கில், அமைந்துள்ள சர்வதேச உணவுத்

தயாரிப்பு நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான உணவு விடுதியில் ஏற்பட்ட எரிவாயுக் கசிவினால்

இந்த வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

கொழும்பு தீயணைப்பு பிரிவினரின் உதவியுடன் பொலிசார் தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தினால் எவருக்கும் உயிர்ச் சேதமோ காயங்கள் ஏற்பட்டதாகவோ இதுவரை தககவில்லையென அவர் கூறினார்.

வெடிப்பு சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிவதற்காக ,அரச இரசாயன ஆய்வாளர்

ஆய்வுகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவமேலும் தெரிவித்தார்.


    இதனை SHARE பண்ணுங்க

    Author: நலன் விரும்பி

    Leave a Reply