நீயா வீழ்ந்தாய் நம்ப முடியவில்லை ..!

நீயா வீழ்ந்தாய்

நீயா வீழ்ந்தாய் நம்ப முடியவில்லை ..!

ஓடி நடந்த காற்று
ஓய்ந்து வீழ்ந்தது
உயிர் குடித்து கொரனோ
உடலை தந்தது

காதில் வந்த செய்தி
கண்ணீர் தந்தது
காயப்பட்டு நெஞ்சு
கதறி துடித்தது

நேற்று வரை
நெஞ்சில் ஏறி நின்றவன்
நேரில் பல கதை
சொல்லி மகிழ்பவன்

முக நூலில் வந்து
முகம் தந்தவன்
முன் வரும் செய்தி
முன் பகிர்ந்து செல்பவன்

மலை போல் உடல்
கட்டு கொண்டவன்
மாயம் என்னவோ – நீ
மண்ணில் வீழ்ந்தது …?

உன்னை கொன்ற கொரனோ
என்னை விடுமோ ..?
உயிரில் அச்சம் இன்று
தொற்றி கொண்டது

பிறந்த நாளில் முந்தி
வாழ்த்து சொல்பவன்
பிரியமுடன் மொழி
எழுதி வைப்பவன்

நாளை வாழ்த்த என்னை
நீயும் இல்லையே
நண்பா உறங்கு
ஆத்ம சாந்தியே ….!

வன்னி மைந்தன்
ஆக்கம் 15-01-2021
லண்டனில் கொரனோ நோயினால் 14-01.2021 அன்று உயிர் பிரிந்த நண்பன் இராயரூபன் துயரில் …!

நீயா வீழ்ந்தாய்
நீயா வீழ்ந்தாய்
Spread the love