நான் வீட்டில் இருக்கிறேன் – மாஸ்டர் பட நடிகை,


நான் வீட்டில் இருக்கிறேன் – மாஸ்டர் பட நடிகை

கொரோனா வைரஸ் உலக மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், என் அம்மா அப்பாவிற்காக நான் வீட்டில் இருக்கிறேன் என்று மாஸ்டர் பட நடிகை கூறியுள்ளார்.

என் அம்மா அப்பாவிற்காக நான் வீட்டில் இருக்கிறேன் – மாஸ்டர் பட நடிகை
மாளவிகா மோகனன்


கொரோனா வைரஸ் உலக மக்களை பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் தற்போது உலகம்

முழுவதும் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு விடப்பட்டது. தற்போது தமிழகத்தில் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் யாரும் வீட்டில் இருந்து வெளியே வரக்கூடாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இருப்பினும் பலர் பல இடங்களுக்கு சென்று வருகிறார்கள்.

யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என்று திரைத்துறையினர் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் விஜய்யின்

மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன், என்னுடைய அம்மா அப்பாவிற்காக நான் வீட்டில்இருக்கிறேன் என்று எழுதி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்

நான் வீட்டில் இருக்கிறேன்
நான் வீட்டில் இருக்கிறேன்