நாடு முழுவதும் சுமார் 116,000 பேர் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

இலங்கையில் தனிமை படுத்த

சுய தனிமையில் இருப்போருக்கு எச்சரிக்கை

நாட்டில் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டவர்கள், சுகாதார அமைச்சு வழங்கியுள்ள ஆலோசனைகளை முறையாக

பின்பற்றுகின்றனரா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக, சிவில் உடையில் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த

தீர்மானித்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் சுமார் 116,000 பேர் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அவர்,

பெரும்பாலானோர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

சுய தனிமையில் இருப்போர் இரவு நேரங்களில் வீட்டை விட்டு

வெளியேறுவதாக, தகவல் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, சட்டத்தை மீறுவோரை கைதுசெய்வதற்காக, தனிமைப்படுத்தலுக்கு

உட்படுத்தப்பட்டுள்ள வீடுகளுக்கு அருகில் பொலிஸாரை சிவில்

உடையில் கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love