நயன்தாரா, அனுஷ்கா பாணியில் காஜல் அகர்வால்,


நயன்தாரா, அனுஷ்கா பாணியில் காஜல் அகர்வால்

வழக்கமான கதாநாயகியாக நடிப்பதை விட கதைக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களிலும் நடிக்க காஜல் தயாராகி வருகிறாராம்.

நயன்தாரா, அனுஷ்கா பாணியில் காஜல் அகர்வால்
காஜல் அகர்வால்


ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில முதிர்ந்த வேடத்தில் நடிக்கிறார் காஜல் அகர்வால். இதையடுத்து

நடன மாஸ்டர் பிருந்தா இயக்கும் படத்தில் துல்கர் சல்மானுடன் நடிக்க உள்ளார். தென்னிந்திய மொழி படங்களில் நடன

இயக்குனராக பணியாற்றிய பிருந்தா, முதல்முறையாக இயக்கும் படத்துக்கு ஹே சினாமிகா என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதை ஜியோ ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு,

பிரீத்தா ஜெயராமன். இசை, கோவிந்த் வசந்தா. சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியது. பாலிவுட்டில் அவர் நடித்துள்ள படமும்

இந்த ஆண்டில் திரைக்கு வருகிறது. இதையடுத்து அவர் ஒரு முடிவெடுத்துள்ளார்.

காஜல் அகர்வால்

வழக்கமான கதாநாயகியாக நடிப்பதை விட ரிஸ்க்கான வேடங்களிலும், கதைக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களிலும்

நடிக்க தயாராகி வருகிறாராம். மேலும் டாப் ஹீரோக்களுடன் தான் நடிப்பேன் என்ற கொள்கையையும் தளர்த்தி உள்ளார்.

நயன்தாரா அனுஷ்கா
நயன்தாரா அனுஷ்கா