நபரின் காலை வெட்டி எடுத்து ஓடியவர் – துரத்தி பிடிப்பு


நபரின் காலை வெட்டி எடுத்து ஓடியவர் – துரத்தி பிடிப்பு

மாளிகாகந்தையில் மற்றுமொரு நபரின் பாதத்தை வெட்டி, அதனை எடுத்துகொண்டு

தப்பியோடியவர், வெயாங்கொடையில் வைத்து சுட்டுப்படு​கொலை செய்யப்பட்டுள்ளார்.

37 வயதான பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்தவரே இவ்வாறு சுட்டுப்படுகொலைச் செய்யப்பட்டுள்ளார்.

விசாரணை நடவடிக்கைகளுக்காக குறித்த சந்தேக நபரை வெயங்கொடை ஹல்கம்பிடிய பகுதிக்கு பொலிஸார்

அழைத்துச்சென்றிருந்த நிலையில், சந்தே நபர் மற்றும் பொலிஸாருக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தின் போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.