தேர்தல் இறுதிப் பிரசாரக் கூட்டங்கள் இன்று-ஓய்ந்தது சரவெடி


தேர்தல் இறுதிப் பிரசாரக் கூட்டங்கள் இன்று-ஓய்ந்தது சரவெடி

பொதுத்தேர்தலில்போட்டியிடும்அரசியல்கட்சிகள்மற்றும்சுயேட்சைக்குழுக்களின்இறுதிப்பிரசாரக்கூட்டங்கள்இன்றுஇடம்பெறவுள்ளன.

பொதுத் தேர்தலுக்கான சகல பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் முடிவடைகின்றன. அதன் பின்னர் பிரசாரக்

கூட்டங்களை நடத்துவதும், வீடுவீடாகச் சென்று வாக்குக் கேட்பதும், துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதும், பதாதைகளைக்

காட்சிப்படுத்துவதும், சுவரொட்டிகளை ஒட்டுவதும் தடைசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சகல ஊடகங்கள் வாயிலாகவும் முன்னெடுக்கப்படும் பிரசார நடவடிக்கைகளும்

இன்று நள்ளிரவு பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷபிரிய தெரிவித்தார்.

அதேவேளை, நாட்டின் அரசியல் கட்சிகள் இறுதிக் கட்ட பிரசாரத்திற்காக தயாராகி வருகின்றன.