
காஷ்மீரில் துப்பாக்கி சூட்டு தாக்குதல்
துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் ,காஷ்மீரில் ஆயுதக் குழுத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 10 பேர் பலியாகியுள்ளனர் .
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பேருந்து ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த பக்த கோடிகளை இலக்கு வைத்து ஆயுதக் குழுவினர் துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் நடத்தினர் .
துப்பாக்கி சூட்டு தாக்குதல்
இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலில் 10 அப்பாவி பொது மக்கள் பலியாகியுள்ளதாக காஷ்மீர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் பாரதப் பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாக பிரதமராக தெரிவு செய்யப்பட்ட 24 மணி இடைவெளியில் இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளது .
இது இந்தியாவின் மோடி அரசுக்கு விடுக்கப்பட்ட முதல் காடு எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது .
அப்பாவி பொதுமக்கள் மீது ஆயுத குழுக்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு இந்தியா அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை அடுத்து ஜம்மு காஷ்மீர் பகுதியில் சிறப்புப் படைகள் சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் .
விசேட கண்காணிப்பு
தாக்குதலை நடத்தியவர்களை கைது செய்யும் தீவிர நடவடிக்கையில் இந்திய ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகவும் ,விசேட கண்காணிப்பு படலங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசுக்கும் காஷ்மீருக்கு இடையில் ,கடும் யுத்தம் இடம்பெற்று வருகின்றது .
இஸ்லாமிய அமைப்புகள் ,தமது தாயக விடுதலை கோரி ,காஷ்மீரில் போராடி வருகின்றனர் .
அந்த அமைப்புகளையும் மக்களையும் ,இந்திய இராணுவம் நசுக்கி அடக்கி ஒடுக்கி வருகின்றமை ,இங்கே குறிப்பிடத்தக்கது.
- இந்தோனேசியாவிற்கு வரிச்சலுகையை வழங்கிய டிரம்ப்
- சர்வதேச அமைதிப்படையை சேர்ந்த மூவர்பலி
- இஸ்ரேலிய தாக்குதல்கள் 12பேர் பலி
- ரஷ்ய பாலிஸ்டிக் ஏவுகணை
- காசா மக்களுக்கு இஸ்ரேல் மிரட்டல்
- இஸ்ரேல் இராணுவத்தால் பாலஸ்தீனியர்கள் கைது
- எருமை தாக்குதலால் விவசாயி பலி
- போயிங் விமானங்களில் எரிபொருள் கட்டுப்பாட்டு
- இந்தோனேசியாவின் 6.7ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
- ஏர்இந்தியா விமானிக்கு மனநலம் பாதிப்பு