நினைவில் துடிக்கும் காதல் …!
இன்று வந்து உன் நினைப்பு
இதயத்தை வாட்டுதடி ..
தூக்கம் இன்றி விழி
துடி துடித்து சாகுதடி …
பாண் மேலே பட்டரிட்டு
பாசமுடன் நீயளித்த ….
உணவு பரிமாறல்
உள்ளத்திலே இனிக்குதடி …
கையிலே காசு இன்றி
காகிதம் தூது விட்ட ….
உன் பணி எண்ணையில
உள்ளம் துடிக்குதடி …
தனிமையில நான் தவிக்க
தாலாட்டு நீ பாட …
உள்ளத்தில சிறு மகிழ்வு
ஊட்டினாய் மறவேனே ….
முகில் முட்டும் மலையோரம்
முடங்கி நீ மறைந்தாலும் …
நினைவுக்குள் நீ இருப்பாய்
நீங்காது மலர்வாய் ….
நான் உனை பார்த்திடத்தான்
நாள் ஒன்று வந்திடுமா ..?
நான் தொழும் என்னிறைவா
நாள் ஒன்று தந்திடுமா ..?
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -12/03/2019