தலைவி படத்தில் இணைந்த பிரபல நடிகை

Spread the love

தலைவி படத்தில் இணைந்த பிரபல நடிகை

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி வரும் ‘தலைவி’ படத்தில் பிரபல நடிகை ஒருவர் இணைந்திருக்கிறார்.

தலைவி படத்தில் இணைந்த பிரபல நடிகை
தலைவி படத்தில் கங்கனா ரனாவத்


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ’தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி

வருகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி

ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

கங்கனா ரனாவத், அரவிந்த்சாமி ஆகியோரின் முதல் தோற்றங்களை படக்குழுவினர் ஏற்கனவே வெளியிட்டனர்.

அரவிந்த்சாமியின் தோற்றம் எம்.ஜி.ஆர் போலவே இருப்பதாக பாராட்டுகள் கிடைத்தன. ஜெயலலிதாவின் பிறந்தநாளை

முன்னிட்டு தலைவி படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டனர். இது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

பூர்ணா

இந்நிலையில், இப்படத்தில் பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அவர் அறிவித்திருக்கிறார். பூர்ணா நடிப்பது சசிகலாவின் கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது.


Spread the love